பெண்களே..!! இந்த மேக்கப் கிட்டை பயன்படுத்தாதீங்க..!! புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
சல்பேட் பராபென்ஸ் என்ற வேதிப்பொருள் கலக்கப்படும் அழகுசாதன பொருட்களை (மேக்கப் கிட்) பயன்படுத்த வேண்டாம் என்றும் இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நவீன காலத்திற்கேற்ப உணவு, வாழ்க்கை முறைகள் மாறிவருகின்றன. இதுமட்டுமல்லாமல், ஆடைகள் அழகு சாதன பொருட்களின் தேவையும் அதிகமாகிவிட்டன. இந்த சூழலில் இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கள் கொண்ட உணவு வகைகள் மற்றும் அழகு சாதனம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். அதன்படி, நாம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, ஃபேஸ் க்ரீம் உள்ளிட்ட அழகு சாதனைப் பொருட்களில் அதிகளவில் கெமிக்கல்கள் கலக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சல்பேட்டுகள் மற்றும் பாரபென்கள் கொண்ட தயாரிப்புகள் தற்போது அதிகமாகிவிட்டன.
இந்த சல்பேட்டுகள் & சர்பாக்டான்ட்கள் அனைத்து வகையான சோப்பு உள்ளிட்ட வீடு சுத்தம் செய்யும் பொருட்களில் கிருமிநாசினியாக பயன்படுகின்றன. மேலும் அவை எண்ணெய் மற்றும் அசுத்தத்தை போக்குபவை. ஆனால், பல்வேறு தோல் பராமரிப்புப் பொருட்களில் சல்பேட் பராபென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
ஏனென்றால், தோல் பராமரிப்புப் பொருட்களில் ஒரு பொதுவான மூலப்பொருளாக இருக்கும் சல்பேட்கள், சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றி, சருமத்தை மிகவும் வறண்டு போகச் செய்வதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், நமது உடலுக்கு பயன்படுத்தப்படும் லோஷன்கள், சன்ஸ்கிரீன், டியோடரண்டுகள், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போன்ற முடி பராமரிப்பு பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களில் பாராபென்கள் காணப்படுகின்றன. இது சமநிலையை சீர்குலைத்து புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு, தோல் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று பல ஆண்டுகளாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
Read More : பெண்களே உஷார்..!! முகத்தில் வளரும் முடியை ஷேவ் செய்வதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?