For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பொதுவெளியில் தப்பு தப்பா பேசாதீங்க.." தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி.!

02:03 PM Nov 26, 2023 IST | 1newsnationuser4
 பொதுவெளியில் தப்பு தப்பா பேசாதீங்க    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் அமீர். இவர் ஆதி பகவன் திரைப்படத்திற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த திரைப்படங்களும் இயக்கவில்லை. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்தி 25 நிகழ்ச்சியின் போது இயக்குனர் அமீர் மற்றும் கார்த்தி சூர்யா ஆகியோர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையை தமிழ் திரை உலகில் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இது தொடர்பாக பேசிய அமீர் தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல் ராஜா ஊடகங்களில் அமீர் குறித்து பேசிய விஷயங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்தான் பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர் தன்னிடம் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் அமீரின் நண்பரும் பிரபல சினிமா இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான சசிகுமார் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக சமுத்திரக்கனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக ஆக்கியது அமீர் தான் என தெரிவித்திருக்கிறார். மேலும் அமீரை பற்றி பேச உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது எனவும் தெரிவித்துள்ளார். அமீர் இல்லை என்றால் கார்த்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி படம் கிடைத்து இருக்குமா எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அனைவரும் கைவிட்ட நிலையில் இயக்குனர் அமீர் தான் முயற்சி செய்து கடன் வாங்கி பருத்திவீரன் திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்தார் எனவும் தெரிவித்துள்ளார். நானும் அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவன் என்பதால் அங்கு நடந்த விஷயங்கள் எனக்கும் தெரியும் என தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி. பொதுவெளியில் ஒருவரைப் பற்றி தவறாக சித்தரிக்க முயல்வது மிகவும் அருவருப்பான ஒரு விஷயம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Tags :
Advertisement