அநாகரீகமாக பேசாதீங்க.. கண்ணியமான முறையில் பதில் கொடுங்க..!! - தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்தன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 7 தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் திருத்தப்பணிகளை த.வெ.க. தலைவர் விஜய்யும் உன்னிப்பாக கவனித்துள்ளார். இதுகுறித்து, மாநில நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை கிராமம் தொடங்கி நகரம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்த நம்கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய புஸ்ஸி ஆனந்த்-க்கு, தவெக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், தனி மனித தாக்குதல் கூடாது என்று த.வெ.க. சார்பாக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடத்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. விஜயின் அறிவுறுத்தலில் பேரில் புஸ்ஸி ஆனந்த் கட்சி நிர்வாகிகளிடம், மாற்றுக் கட்சியினர் வைக்கும் எதிர் கருத்துகளுக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும்,, அநாகரீகமாக பேச கூடாது என கூறியுள்ளார்..
உங்களை கடுப்பேற்றும் வகையில் பேசினால் அதற்கு விழுந்துவிட கூடாது. எப்படி பேசினாலும் கண்ணியமாக பதில் கொடுக்க வேண்டும். மக்களுக்கு உதாரணமாக நாம் இருக்க வேண்டும். மற்ற கட்சியினர் பேசுகிறார்கள் என்பதற்காக நாம் பேச கூடாது என்று.. ஊடக விவாதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.