கூகுளில் தெரியாமல் கூட இந்த விஷயங்களை தேடாதீங்க..!! மீறினால் ஜெயில் தண்டனை நிச்சயம்..!! இதெல்லாம் இந்தியாவில் சட்டவிரோதம்..!!
கூகுள் என்பது நமக்குள் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால் உடனடியாக கூகுளில் தேடுவார். இந்த தொழில்நுட்ப யுகத்தில் அனைத்து விஷயங்களும் இணையத்தில் கொட்டி கிடக்கிறது. ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடினால், அது உங்களுக்கு பின்விளைவுகளை கொடுத்துவிடும். சிறைக்கு செல்லக் கூடிய நிலைமை ஏற்படும். எனவே, கூகுளில் சிலவற்றை தேடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
வெடிகுண்டு தயாரிப்பது எப்படி..? கூகுளில், வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிமுறைகளைத் தேடுவது கிரிமினல் குற்றமாகும். இதுபோன்ற விஷயங்களை தேடுபவர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். மேலும் உங்கள் Search History பாதுகாப்பு நிறுவனங்களின் ரேடாருக்கு கீழ் வந்தால், நீங்கள் சிறை செல்வது உட்பட சட்டரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
குழந்தைகளின் ஆபாச படங்கள் : கூகுளில் குழந்தைகள் மற்றும் சிறார்களை உள்ளடக்கிய ஆபாசப் படங்களை தேடக் கூடாது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க நேரிடும்.
ஹேக்கிங் : கூகுளில் ஹேக்கிங் தொடர்பாக எதையும் தேடக் கூடாது. அப்படி தேடினால், சம்பந்தப்பட்ட நபர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், சிறைக்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்படும்.
கருக்கலைப்பு : அதேபோல், கூகுளில் கருக்கலைப்பு செய்வது எப்படி..? என்பது போன்ற விஷயங்களை தேடக்கூடாது. ஏனென்றால், இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமாகும்.
திரைப்படங்கள் : தற்போது இன்று ஒரு படம் ரிலீஸ் ஆனால், அன்றைய தினமே அந்த படம் இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், கூகுள் மூலம் திரைப்படங்களை இலவசமாக கண்டுபிடிக்கவோ அல்லது பார்க்கவோ செய்தால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. திரைப்பட திருட்டில் ஈடுபடுவது, அதனைத் தேடுவது கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.