For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அண்ணாமலையை சீண்டாதீங்க’..!! ’நீங்கள் செய்தது தவறு’..!! பொதுவெளியில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா..!!

A video of Amit Shah calling Tamilisai, folding four fingers of his hand as if reprimanding him and extending one finger to say something is going viral on social media.
01:47 PM Jun 12, 2024 IST | Chella
’அண்ணாமலையை சீண்டாதீங்க’     ’நீங்கள் செய்தது தவறு’     பொதுவெளியில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா
Advertisement

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வணக்கம் வைத்தார். அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிப்பது போல கையின் நான்கு விரலை மடக்கி, ஒரு விரலை நீட்டி கண்டிப்பதுபோல் எதையோ சொல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நீங்கள் செய்தது தவறு என்பது போலவும், இனி அதுபோல் செய்யக்கூடாது என்பது போலவும் தமிழிசையிடம் அமித்ஷா பேசிய கூறியதாக தெரிகிறது. மேலும் அண்ணாமலை குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்து வந்த நிலையில், அது போல் இனி பேச வேண்டாம். நீங்கள் பேசியது தவறு, மாநில தலைவருக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். அவர் தான் தலைவர். கட்சிக்குள் மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று அமித்ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்திருப்பார் என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளி தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பொதுவான அரசியல் விமர்சகர்கள், அமித்ஷா பொது மேடையில் வைத்து முன்னாள் ஆளுநர் என்று பாராமல் இப்படி கண்டித்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : அடடே இப்படி கூட உடல் எடையை குறைக்கலாமா..? அதுவும் செலவே இல்லாமல்..!! எப்படின்னு தெரியுமா..?

Tags :
Advertisement