Viral Video | "இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது"..!! முன்கூட்டியே பாலத்தில் பார்க்கிங்கை போட்ட சென்னை வாசிகள்..!!
கடந்தாண்டு போல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிக கனமழை பெய்யும் என்பதால், வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது கார்களை வேளச்சேரி-பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது, குடியிருப்புகள் முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதில், பல கோடி மதிப்பிலான கார்கள், மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. மேலும், சென்னையில் இருந்து வெளியேறும் மழை நீர் அனைத்தும் வேளச்சேரி பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலம் செல்வதால் அந்த பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.
இதனால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் பார்க்கிங் செய்துள்ளனர். மேலும், மேம்பாலத்தின் மேல் ஓரமாக கார்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறதா? என போக்குவரத்து போலீசாரும் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இனி வெஸ்டர்ன் டாய்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!! சில டிப்ஸ் உங்களுக்காக..!!