இந்த திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் அதிகரிக்குமா..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!
இந்த நவீன காலத்தில், உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், எப்படி தூங்க வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு மற்றும் அதிர்ச்சி உண்டாகும் என்று நமது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளை 25% தூக்கத்திலேயே கழிக்கின்றனர் என்றும், ஒரு குழந்தை பிறந்தவுடன் முதல் 2 வருடத்திற்கு, பெற்றோர்கள் 6 மாதம் வரை தூக்கத்தில் இழப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நல்லா தூங்கினால், நமது எடை அதிகரிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், தூங்காமல் ஒருவாரம் இருந்தால் 900 கிராம் எடை வரை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் சொல்லப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் வேலை பார்க்கும்போது ஒருவர் தூங்கினால், அவர்களுக்கு தூங்குவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறதாம். திபெத்தில் மதகுருமார்கள் பெரும்பாலும் தலைகீழாக தான் தூங்குகிறார்களாம். காலையில் எழுந்தவுடன் நான் நிம்மதியாக தூங்கினேன், நான் நிம்மதியாக தூங்கினேன் என்று மனதளவில் நினைத்துக்கொண்டால் அந்தநாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூனை அதன் வாழ்நாளில் 70% தூக்கத்திலேயே கழிக்கிறதாம். உலகம் முழுவதும் உள்ள மாணவர்களில் 73% மாணவர்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கனவில் வன்முறை காட்சிகள் வந்தால் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட மூளை நோய்கள் வரும் என்றும் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளன. மேலும், திக்கான அல்லது டார்க்கான பெட்சீட்டுகளை பயன்படுத்தினால், நாம் சீக்கிரம் தூங்கிடலாம் என்றும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விஜய் போட்ட குண்டு..!! திமுக கூட்டணிக்கு கிடைக்கும் முக்கிய பதவிகள்..!! தீவிர ஆலோசனையில் முதல்வர்..!!