காலை உணவை தவிர்த்தால் கேன்சர் கூட வருமாம்..!! இதயநோய், சர்க்கரை நோயும் உங்களை தாக்கும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
காலை நேர உணவை தவிர்த்தால், பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றாட வாழ்க்கையில் பலரும் காலையில் அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறார்கள். இதனால், காலை உணவையே சாப்பிடுவதில்லை. நேரடியாக மதிய உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். இதனால், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அன்று நாள் முழுக்க நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். காலை உணவு என்பது பலவிதமான ஊட்டச் சத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். குழந்தைகளின் சரியான உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான காலை உணவு முக்கியமாகும். தூங்கும் போது, சுமார் 8-10 மணி நேரம் நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், காலை உணவைத் தொடர்ந்து சாப்பிடாமல் விட்டால், டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும். அதேபோல காலை உணவைத் தவறாமல் சாப்பிட்டால், அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியமான காலை உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைவு. 25 வயதுக்கு கீழ் இருப்பவர்களில் 27% பேருக்கு இதயம் தொடர்பான பாதிப்பு ஏற்படக் காலை உணவைத் தவிர்ப்பதே முக்கியக் காரணமாக உள்ளது.
காலை உணவைத் தவிர்ப்பது கேன்சர் ஆபத்துகளையும் அதிகரிக்கிறது. அதேபோல நமது பாசிட்டிவ் மூடையும் அது பாதிக்கிறது. காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு நினைவாற்றல் திறன் குறைவாகும், சோர்வு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலை உணவு உடலுக்கு எனர்ஜி தருவதாக இருக்க வேண்டும். இட்லி, தோசை உணவுகளைச் சாப்பிடலாம். அத்துடன் காய்கறிகள், பழங்களையும் சாப்பிடலாம். அதேநேரம் காலையில் இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காலை உணவில் ஸ்நாக்ஸ், வறுத்த உணவுகள் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.