காலை எழுந்த உடன் தவறுதலாக கூட இந்த 5 பொருட்களை பார்க்காதீங்க.. வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி அதிகரிக்குமாம்..
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும், இருக்கக்கூடாது, எந்தெந்த அறைகள், எந்த திசையில் இருந்தால் நல்லது, பூஜை அறையின் அமைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் காலையில் எழுந்த உடன் பார்க்ககூடாத சில விஷயங்களையும் வாஸ்து குறிப்பிடுகிறது.. காலையில் சில பொருட்களைப் பார்ப்பது நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் எழுந்தவுடன் பார்க்கக் கூடாத பல விஷயங்கள் உள்ளன. இந்தப் பொருட்களைப் பார்ப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் எனவும், வீட்டில் வசிப்பவர்களுக்கு பிரச்சனைகளையும் நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே வேளையில் காலையில் எழுந்தவுடன் முதலில் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும். லட்சுமி தேவி உள்ளங்கைகளில் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், காலை எழுந்த உடனே உள்ளங்கைகளை பார்க்கவேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் காலையில் கைகளை பார்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், சில பொருட்களை காலையில் எழுந்தவுடன் பார்க்கக் கூடாது. அந்த 5 பொருட்கள் என்ன, ஏன் பார்க்கக்கூடாது என்பது குறித்து வாஸ்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
உடைந்த கண்ணாடி: உடைந்த கண்ணாடியை காலை எழுந்த உடன் பார்ப்பது அபசகுனமாகக் கருதப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. காலை எழுந்த உடன் உடைந்த கண்ணாடியை பார்த்தால் ஏதேனும் கெட்டது நடக்கும் என்று கூறப்படுகிறது.
நிழல்: காலையில் எழுந்தவுடன் நிழலைப் பார்க்கக்கூடாது, அது சொந்த நிழலாக இருந்தாலும் சரி, வேறொருவரின் நிழலாக இருந்தாலும் சரி. வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்களைத் திறந்தவுடன் நிழலைப் பார்ப்பது அபசகுனமாக இருக்கலாம். இது மரணம், வெறுப்பு அல்லது இருளுடன் தொடர்புடையது என்பதால் கட்டாயம் நிழலை பார்க்கக்கூடாது.
நின்று போன கடிகாரம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள கடிகாரம் நின்றுவிட்டாலோ அல்லது உடைந்துவிட்டாலோ, அதை வீட்டில் வைக்க வேண்டாம். இது அபசகுனம். காலையில் எழுந்தவுடன் நின்று போன கடிகாரத்தைப் பார்த்தால், உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
உடைந்த சிலை: எந்த உடைந்து போன சிலையையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. பூஜை அறையில் கூட வைத்திருக்கக் கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். உடைந்த சிலைகளை வீட்டில் வைத்திருப்பது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
அழுக்கு பாத்திரங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் அழுக்கு பாத்திரங்களைப் பார்க்கக்கூடாது. இவை உறவுகளில் மனக்கசப்பை ஏற்படுத்தும், வீட்டின் அமைதியான சூழலை பாதிக்கும். மேலும் இது வறுமையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே, இரவு உணவுக்குப் பிறகு மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாத்திரங்களைக் கழுவி விடுவது நல்லது.
Read More : Vastu Tips : சமையலறையில் பாத்திரத்தை இப்படி வைக்க கூடாது..!! வாஸ்து என்ன சொல்கிறது?