”அரைகுறை ஆடையுடன் வீடியோ போட்டால் லைக் போடாதீங்க”..!! ”அப்படி செய்தால் தான் இதை தடுக்க முடியும்”..!! நடிகை ரச்சிதாவின் பரபரப்பு கருத்து..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்த நிலையில், தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். அவர் நடித்த எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சோசியல் மீடியாவில் சிலர் பிரபலமாக வேண்டுமென்று அரைகுறை ஆடையுடன் வீடியோ போடுகிறார்கள். அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”அது அவர்களுடைய விருப்பம். அவர்களுடைய உடையை குறைத்து, அவர்கள் தங்கள் பிரபலமாகி கொள்ள வேண்டுமென்று அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, போடும் போஸ்ட்களால் சாதாரண பெண்களையும் பாதிக்கிறது.
தாங்கள் பிரபலமாக வேண்டுமென்று சிலர் ஆபாசமாக உடை அணிகிறார்கள். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வீடியோ போட்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதால் தெருவில் போகும் பெண்கள் மீது அவர்களின் தவறான பார்வை விழுகிறது. அதனால் தான் பல பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆபாசமாக வீடியோ போடுபவர்கள் லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போடுகிறார்கள். அதனால் லைக் போடுபவர்கள் அதை கடந்து போய்விட்டால், நாம் என்ன செய்தாலும் இவர்கள் கண்டு கொள்ளவில்லையே என்று ஆபாச உடை அணிந்து வீடியோ போடுவது குறைத்து விடுவார்கள்” என்று பேசியுள்ளர்.
இது சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏனென்றால், ரச்சிதா பல வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களில் அரைகுறை உடை போட்டு இருக்கிறார். குட்டை பாவாடை மற்றும் சட்டை பட்டனை கழட்டிவிட்டு, அவர் போட்ட வீடியோக்கள் கூட அதிகமான லைக்குகள் குவிந்திருந்தது. அதுபோல ரச்சிதாவின் கருத்து சரிதான் என்று சிலர் பாராட்டியும் வருகின்றனர். தற்போது பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரச்சிதா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.