For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"கோட் படத்தில் நடிச்சது ரொம்ப பெரிய தப்பு" நடிகை அளித்த பரபரப்பு பேட்டி..

actress meenakshi choudry interview on goat movie
07:48 PM Jan 06, 2025 IST | Saranya
 கோட் படத்தில் நடிச்சது ரொம்ப பெரிய தப்பு  நடிகை அளித்த பரபரப்பு பேட்டி
Advertisement

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மீனாட்சி செளத்ரி. ஹரியானாவை சேர்ந்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். பல் மருத்துவம் படித்த இவர், 2018ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றார். மேலும், இவர் மாநில அளவிலான நீச்சல் போட்டியிலும் பேட்மிண்டன் போட்டியிலும் வெற்றி பெற்றவர். தற்போது இவர் அளித்திருக்கும் பேட்டியில், அவர் கூறிய விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஹிந்தி படத்தின் மூலம், மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து, தமிழில் விஜய் ஆண்டனி நடித்த திரில்லர் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா ஆகியோர் நடித்த இந்த படத்தில், விஜய், அப்பா, மகன் என இரண்டு விதமான ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு சில காட்சியில் மட்டுமே வரும், மீனாட்சி சௌத்ரி பாதியிலேயே மகன் விஜயால் கொல்லப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலர், இந்த படத்திற்கு ஸ்ரீநிதி கதாபாத்திரமே தேவையில்லை என்று ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், மீனாட்சி சௌத்ரி இதுகுறித்து தற்போது பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் பேசும் போது, "நான் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்ததற்காக என்னை பலர் கேலி செய்தனர். ட்ரோல்களால், ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன்.

அப்போது தான், துல்கருடன் நடித்த லக்கி பாஸ்கர் படத்திற்காக பலர் என்னை பாராட்டினார்கள். அதில் இருந்து தான், இனி நல்ல கதை அம்சம் உள்ள படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Read more: “குழந்தை இருந்தா கள்ளக்காதலன் கூட சந்தோசமா இருக்க முடியாது” பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தாய்..

Tags :
Advertisement