வீட்டில் இந்த லிமிட்டை மீறி பணத்தை வைக்காதீங்க.. வருமான வரித்துறை விதிகள் சொல்வது இதுதான்..!!
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? பணத்தை வைத்திருப்பது பற்றிய வருமான வரி விதிகள் என்ன கூறுகிறது? வருமான வரித்துறை அதிகாரிகள் ரொக்கமாகப் பணத்தை உங்கள் வீட்டில் கண்டு பிடித்தால் என்ன நடக்கும்? வீட்டில் பணத்தை வைத்திருந்தால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வருமான வரி விதிகள் இங்கே.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், பலர் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். மேலும் வீட்டில் பணத்தை வைத்திருக்கவும் விரும்புகிறார்கள். ஆனால், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தைத் தடுக்க வருமான வரித் துறை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. எனவே உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? பணம் தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
விதிகளின்படி, வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக அரசால் எந்த வரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை, ஆனால் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அது எங்கிருந்து வந்தது, அதன் ஆதாரம் என்ன என்பது பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். பணம் சட்டப்பூர்வமாக சம்பாதித்து அறிவிக்கப்பட்டால், தொகையைப் பொருட்படுத்தாமல் கவலைப்படத் தேவையில்லை. விசாரணையின் போது உங்கள் பணத்தின் மூலம், அதாவது பணம் எங்கிருந்து வந்தது என்பதை உங்களால் கூற முடியவில்லை எனில், டியாவிட்டால், அது சிக்கலுக்கு வழிவகுக்கும்.
இது மட்டும் அல்லாமல் வருமான வரி துறையின் விசாரணை, வழக்கு எனப் பலவும் இதில் அடங்கும். எனவே எப்போதும் கையில் இருக்கும் பணத்திற்கு வருமான வரிக் கணக்கை நீங்கள் பூர்த்திச் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். மத்திய நேரடி வரி அமைப்பின் விதிமுறைகள் படி பணத்திற்கான ஆதாரத்தைக் காட்ட முடியாவிட்டால், வரித் துறை பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்குச் சுமார் 137 சதவீதத்திற்கு இணையான அபராதத்தை விதிக்க முடியும்.
கிரெடிட்/டெபிட் கார்டுகளுடன் பண பரிவர்த்தனைகள்:
* ஒரே நேரத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்.
* பான் மற்றும் ஆதார் ஆகிய இரண்டும் ஆதரிக்காத வரை ரொக்கமாக ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
* நீங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு நிலையான வரம்பு இல்லை. ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் அவசியம்.
* பெரிய தொகை அல்லது சரிபார்க்கப்படாத பணம் இருக்கும் பட்சத்தில் விசாரணைகள், அபராதங்கள் மற்றும் கூடுதல் வரி வசூலுக்கு வழிவகுக்கும்.
* சட்ட மற்றும் நிதி சிக்கல்களைத் தவிர்க்க பண பரிவர்த்தனை விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
Read more ; தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, இல்லை போலீஸ் ஆட்சியா…? அன்புமணி ராமதாஸ் காட்டம்…!