10 ஆம் வகுப்பு போதும்.. சத்துணவுத் திட்டத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..
சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 காலிப்பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில், ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய (STS) நிலை-1 (ரூ.3000-9000) வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணி நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களில் 12 மாதங்கள் திருப்திகரமாகப் பணியை முடிக்கும் நபர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியச் சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Read more ; விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா? விண்ணில் பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்..?