காலையில் இந்த பொருட்களின் முகத்தில் மட்டும் முழிச்சிடாதீங்க..!! வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன..?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் நாள் நன்றாக ஆரம்பித்தால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்கும். ஆனால், சில சமயங்களில் வீட்டை விட்டு வெளியேறும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது. இது உங்கள் மனநிலையை முற்றிலும் கெடுத்துவிடும். காரணம், காலையில் எழுந்தவுடன் சில வேலைகளை செய்வதால் தான் இதுபோன்று நிகழ்கிறது என்று வாஸ்து கூறுகிறது.
காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் இவற்றைப் பார்ப்பது அசுப பலன்களை தரும் என்பது நம்பிக்கை. மேலும், நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, வாஸ்துபடி எந்தெந்த விஷயங்களை காலையில் பார்க்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நிழல்களை பார்க்க கூடாது : வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலையில் எழுந்தவுடன் உங்கள் சொந்த நிழல் அல்லது மற்றவரின் நிழல்களை பார்க்க கூடாது. மேலும், சூரிய தரிசனத்தின் போது மேற்குத் திசையில் நிழலே பார்த்தால் அது அசுப பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. எனவே, தீய விளைவுகளை தவிர்க்க நிழலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி பார்க்க கூடாது : காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தை பார்ப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை செய்யவே கூடாது. ஏனென்றால், இதனால் அனைத்து எதிர்மறை சக்திகளும் உங்களுக்குள் நுழைந்துவிடும். இதனால் உங்கள் நாள் முழுவதும் வீணாகிவிடும் மற்றும் வறுமை உங்களை விட்டு விலகாது.
அழுக்கான பாத்திரங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் கிடக்கும் அழுக்கான பாத்திரங்களை எப்போதும் இரவில் கழுவினால் அன்னபூரணி அருள், அன்னலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். மேலும், எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் நுழையாது. இரவில் பாத்திரங்களை கழுவாவிட்டால் நீங்கள் எழுந்தவுடன் அவற்றைப் பார்த்தால் உங்கள் நாள் முழுவதும் கெட்டுப் போகலாம். மேலும், உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வறுமை உங்களை விட்டு விலகாது. எனவே, பாத்திரங்களை இரவிலே கழுவி விடுவது நல்லது.
Read More : ”எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தேவை”..!! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!!