For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.6000 டோக்கன் கிடைக்கவில்லையா?… விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு!… மிஸ் பண்ணிடாதீர்கள்!

09:30 AM Dec 15, 2023 IST | 1newsnationuser3
ரூ 6000 டோக்கன் கிடைக்கவில்லையா … விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு … மிஸ் பண்ணிடாதீர்கள்
Advertisement

சென்னை, மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ம் தேதி மிக்ஜாம் புயல் மழையால் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தெருக்கள் மற்றும் சாலைகளில் தேங்கியது.

Advertisement

மேலும் வெள்ளத்தில் சிக்கி இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்றவர்கள் 3, 4 அடி தண்ணீரில் சிக்கியதால் தங்கள் வாகனங்கள் பழுதானது. தமிழக அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர். இந்த நிலையில், தமிழக அரசு வெள்ளம் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் ரேசன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பாதிக்கப்பட்டு இருந்தால், பாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விவரங்களை ரேசன் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தங்கள் வங்கி கணக்கு எண்ணையும் அளிக்க வேண்டும். அதிகாரிகள் விசாரித்து நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்துவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் நேற்றுமுதல் வழங்கப்பட்டது. நாளை (சனி) மாலை வரை வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன்களை வழங்குவார்கள். காலை 50 முதல் 100 டோக்கன், மாலையில் 50 முதல் 100 டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வரும் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை (17-ம் தேதி) முதல் 21-ம் தேதி (வியாழன்) வரை ரேசன் கடைகளில் டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு பொதுமக்கள் சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த 5 நாட்களில் பெறாதவர்கள் 22-ம் தேதி (வெள்ளி) ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். டோக்கன் கிடைக்காதவர்கள், உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் ரேசன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அங்கேயே வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் இரண்டு நகராட்சி அலுவலர்கள் இருப்பார்கள். இந்த நிலையில் யார் யாருக்கெல்லாம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது குறித்த பட்டியலும் ரேசன் கடைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளதாக ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement