For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குடையை மறந்துறாதீங்க..!! இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கப் போகுது..!! இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

The Meteorological Department has announced that heavy rain will occur in some districts of Tamil Nadu today and tomorrow.
02:18 PM Jan 18, 2025 IST | Chella
குடையை மறந்துறாதீங்க     இன்றும்  நாளையும் கனமழை வெளுத்து வாங்கப் போகுது     இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்
Advertisement

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜனவரி 18) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளைய தினம் (ஜன,19ம் தேதி) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று (ஜனவரி 18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உடைந்து போன முட்டைகளை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..? உயிரையே பறித்துவிடும்..!! மருத்துவர்கள் பகிரங்க எச்சரிக்கை..!!

Advertisement