இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பழங்களை மறக்காமல் சாப்பிடுங்க..!! ஆயுள் கூடும்..!!
நமது உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைத்தால்தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, ஒரு சில வண்ணங்களில் இருக்கும் உணவுகளை குறிப்பிட்ட வயதுக்கு மேல் தவிர்க்க வேண்டும் எனக் கூறும் மருத்துவர்கள், சில வண்ணங்களில் இருக்கும் உணவுகளை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது சிவப்பு நிறம்.
குடை மிளகாய்: குடை மிளகாயை நாம் எப்போதாவது ஒருமுறைதான் சாப்பிடுகிறோம். அதிலும் பச்சையாக இருக்கும் குடைமிளகாய்தான் பெரும்பாலான இல்லத்தரசிகளின் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால், குடைமிளகாய் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. குறிப்பாக, சிவப்பு நிற குடைமிளகாய் குறைந்த கலோரிகளும், அதிக நார்ச்சத்தும் கொண்டது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் லைகோபின் எனும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகியவை இருப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, இதயத்தின் ஆரோக்கியத்தையும் இது அதிகரிக்கிறது.
பீட்ரூட்: பீட்ரூட் என்றால், அது ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவு என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும். குறிப்பாக, ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு திறனை அதிகரிக்க உதவி செய்யும். இதயத் துடிப்பையும் சீராக்கும்.
ஆப்பிள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் ஆப்பிளை சாப்பிடலாம். வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த ஆப்பிளை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகி, இதய ஆரோக்கியம் மேம்படும்.
மாதுளை: மாதுளம் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, மாதுளையில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் இதய நோய்களை தடுக்கக் கூடியவை.
செர்ரி: செர்ரி பழத்தை நிறைய பேர் உலர்ந்த நிலையில், சாப்பிடுவோம். ஆனால், காய வைக்காத செர்ரி பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும், பாலிபினால்களும் அதிகளவில் இருப்பதால், இவை இதயக்குழாய் நோய்கள் வராமல் தடுக்கின்றன.
ஸ்டிராபெர்ரி: ஸ்டிராபெர்ரி நல்ல சிவப்பு நிறத்தில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையில் இருக்கும். ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகமுள்ள இந்த பழத்தில், வைட்டமின் சி உள்ளிட்ட இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆற்றல் வாய்ந்த ஊட்டச்சத்துகளும் உள்ளன.
இதயத்தை பாதுகாக்க இதுபோன்ற சிவப்பு நிற உணவுகளுடன் முழு தானியங்கள், கீரைகள், காய்கறிகளையும் அதிகளவில் எடுத்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.
Read More : வீடுகளில் இனி தெரியாமல் கூட இதை வளர்க்காதீங்க..!! சிக்கினால் ஜெயில் தான்..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!