அலுவலகம் செல்பவர்கள் இந்த விஷயத்தை மட்டும் மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் இருக்கு..!!
நாம் பணிபுரியும் இடங்களில் கணக்கு வழக்கில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பதற்காக மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அதன் ஆரோக்கிய நன்மைகள் அல்லது ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் அந்த நொடியில் உடலுக்கு சக்தி கிடைக்கும் என நினைத்து கண்ட உணவையும் சாப்பிடுகிறோம்.
ஆனால், நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது உங்கள் கேஜெட்டுகள் மற்றும் ஸ்டேஷனரிகளுக்கு அடுத்ததாக ஆப்பிள், உலர் பழங்கள் மற்றும் உலர்ந்த ப்ளம்ஸ் பழங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ கூறுகிறார்.
"ஆப்பிள், உலர் பழங்கள், உலர்ந்த ப்ளம்ஸ் போன்றவற்றை பணியிடத்திற்கு எடுத்துச் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகும். இவை சமோசா, கட்லெட்டுகள், பர்கர்கள் போன்ற பொதுவான அலுவலக தின்பண்டங்களுக்கு மாற்றாக இருக்கும். இது மாதிரியான இயற்கை உணவுகள் உங்கள் மேஜையில் தயாராக இருந்தால், உங்கள் மொத்த கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கலாம்" என்று கூறுகிறார்.