"மறந்தும் வாழைப்பழத்துடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க." நிபுணர்களின் எச்சரிக்கை.!
வாழைப்பழம் என்பது அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு பொருள் மட்டும் அல்லாது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். மேலும் இந்த பழத்தில் புரதம் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பயணங்களின் போது ஏற்படும் பசியை சமாளிப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கிறது. பல நன்மைகளை உள்ளடக்கிய வாழைப்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு விதமான தீமைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வாழைப்பழத்தை பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களிலும் கொழுப்பு புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது செரிமானத்திற்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என மருத்துவர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புரதச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களுடன் வாழைப் பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள மாமிசம் மற்றும் முட்டை ஆகியவற்றுடன் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர் இது செரிமான பிரச்சனை மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணமாக கூடியவை என்றாலும் புரதச்சத்துக்கள் நிறைந்த மாமிசம் மற்றும் முட்டை ஆகியவற்றுடன் இதனை சாப்பிடும் போது சமநிலை பாதிக்கப்படுகிறது. இவற்றால் நொதிகள் மற்றும் வாயு பிரச்சனைகளும் உடலில் ஏற்படலாம்.
சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை மற்றும் திராட்சை ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் இருக்கக்கூடிய அமிலங்கள் நம் வயிறு மற்றும் செரிமான மண்டலத்தில் அசௌகரியங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன. சிட்ரஸ் வகை பழங்களிலும் அதிக அமிலங்கள் உள்ளது வாழைப்பழத்திலும் நிறைய அமிலங்கள் இருக்கின்றன. இவற்றின் கலவை நம் வயிற்றின் அசௌகரியத்திற்கு காரணமாக அமையும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.