மீன் சாப்பிடும்போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..!! விஷமாக மாறிவிடும்..!! ஜாக்கிரதை..!!
சில உணவுகளுடன் மீன்களை சேர்த்து சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். மீன்களில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்திலும் பல ஊட்டச்சத்துகளும் அடங்கியிருக்கின்றன. புரோட்டின், அயன், வைட்டமின்கள் மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஒமேகா 3 பேட்டி ஆசிட்கள் போன்றவை உள்ளன.
இருப்பினும் ஒமேகா 3 பேட்டி ஆசிட்கள் மீன்களில் அதிகம் உள்ளது. மீனில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. மீன் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் அதை சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, பால் மற்றும் பால் பொருட்களுடன் மீன் சாப்பிடக் கூடாது.
சிலர் தயிர் அல்லது பாலை பயன்படுத்தி மீன் சமைக்கிறார்கள். இப்படி செய்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பால், தயிர் அல்லது பிற பால் பொருட்களுடன் மீன் சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இது தவிர அஜீரணம், வீக்கம் வயிற்று வலி, தோல் தொற்று, தோளில் வெள்ளைப் புள்ளிகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும், மீன் சாப்பிடும்போது, அதனுடன் புளிப்பு பழங்களை சாப்பிடக்கூடாது. சிலர் சிட்ரஸ் பழங்களை சாலட்டில் சேர்த்து அதை மீனுடன் சாப்பிடுகிறார்கள். மீன் மற்றும் சிட்ரஸ் பழங்களின் கலவையானது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, கி.வி, போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டி தன்மை கொண்டவை. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் மீன் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அதில் அதிகளவு ட்ரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் உள்ளது. உருளைக்கிழங்கு, பாஸ்தா போன்ற அதிக மாவுச்சத்து கொண்ட உணவுடனும் மீன்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் செரிமான அமைப்பு மந்தமாகவும், மெதுவாகவும் மாறும்.