"இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க."! பதற வைக்கும் அறிக்கை.! உண்மை என்ன.?
உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அனைவரும் நல்ல சத்தான உணவை சாப்பிட்டு நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான நீண்ட ஆயுளை விரும்புகின்றனர். எனினும் அவசரகால இயந்திர வாழ்க்கை முறை மற்றும் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளிலேயே சில விஷத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சுரக்காய் சாம்பார் மற்றும் கூட்டுக்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான காய்கறி ஆகும். இதில் உடலுக்கு நன்மை தரும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. எனினும் சுரக்காய் சாப்பிடும்போது கசப்பாக இருந்தால் சாப்பிடாமல் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அந்தக் காய்கறியில் விஷத்தன்மை ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டின் சிறந்த மூலமாக விளங்குகிறது. ஆனால் உருளைக்கிழங்கில் ஆங்காங்கே பச்சை நிறமாக இருந்தால் வாங்க வேண்டாம் என உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் உருளைக்கிழங்கில் செலனின் எனப்படும் வேதிப்பொருள் அதிகமானால் ஆங்காங்கே பச்சை நிறமாக மாறிவிடும். இந்த வேதிப்பொருள் நரம்பு சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தக்கூடியது. எனவே இது போன்ற பச்சை திட்டுக்கள் இருக்கும் உருளைக்கிழங்கை தவிர்த்து விட வேண்டும்.
தயிர் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு உணவு. எனினும் தயிர் கட்டியாகாமல் இருந்தால் அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர் கெட்டியாகாமல் திரிஞ்சு இருந்தால் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கெட்டியாகாத தயிரை தவிர்க்க வேண்டும் .
நாம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் அடுத்து இருப்பது பாதாம். பாதாமிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இன்னும் பாதாம் சாப்பிடும்போது கசப்பு சுவை ஏற்பட்டால் அதனை உடனடியாக தவிர்க்க வேண்டும். நாம் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகளில் ஐந்தாவது இடத்தில் இருப்பது தேன். தேனை என்றுமே சுட வைத்து அல்லது கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் தேனை கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து ஹெச்எம்எல் என்ற வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது நமது உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகளை விளைவிக்கக் கூடியது. எனவே இந்த ஐந்து உணவுகளையும் தவிர்த்துக் கொள்வது நல்லது