இது தெரியாம இனி ”மீல் மேக்கர்” சாப்பிடாதீங்க..!! தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், கர்ப்பிணிகளே உஷார்..!!
மீல் மேக்கரை அதிகமாக எடுத்துக் கொள்வதால், ஹார்மோன் சமநிலை மாறி ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சோயா பீன்ஸ் சக்கையை வைத்து தயாரிப்பது தான் மீல் மேக்கர். இதில், புரதச்சத்து காணப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இறைச்சிக்கு பதிலாக பிரியாணியில் இதை போட்டு சமைத்து கொடுத்தால் வேண்டாம் என சொல்லாவதவர்களே கிடையாது. இதில் புரதம் அதிகமாக காணப்படுவதால், ருசிக்காக மீல் மேக்கரை அடிக்கடி சமைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர்.
ஆனால், மீல் மேக்கரால் பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மீல் மேக்கர் அளவுக்கு மிஞ்சி அதிகமாக சாப்பிட்டால், ஹார்மோன் சமநிலை மாறி ஆண்களுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் ஒவ்வாமைக்கு காரணமாகிவிடும். ருசிக்காக மீல் மேக்கர் அடிக்கடி சமைப்பதால் நீங்களே புற்றுநோய் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், இதை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் நிறைய உற்பத்தியாக காரணமாகிவிடும்.
அதுமட்டுமின்றி, இதை சாப்பிடுவதால் கனிம குறைபாடு கூட வரும். இதில் புரதம் தான் அதிகமாக உள்ளது. அதனால் மற்ற சத்து குறைபாடு வரலாம். புரதச்சத்தை கிரகிக்க முடியாத செரிமான கோளாறு ஏற்படலாம். இந்த மீல் மேக்கரில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நம்முடைய சிறுநீரக செயழிலப்பு பாதிப்புக்கு காரணம் ஆகும். சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் உங்களுக்கு தெரியாமல் மீல் மேக்கரால் உருவாகி வருகிறது. தாய்ப்பால் ஊட்டும் பிரசவித்த பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கரிடம் கேட்காமல் மீல் மேக்கர் உண்பதை தவிர்ப்பது நலம்.