தண்ணீரை இனி இப்படி குடிக்காதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு..!!
பயணத்தின் போதோ, அலுவலங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால், பிளாஸ்டிக் நுண்துகள்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தில் கலந்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இன்றைய கால கட்டத்தில் புவி மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக்தான். உணவு பொட்டலங்கள் முதல் தண்ணீர் வரை அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் பொருட்களில் தான் அதிகம் கிடைக்கிறது. இப்படி பிளாஸ்டிக் சூழ் உலகில் தான் இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதால், மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனிதனின் ரத்தத்தில் கலந்திருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியானது. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனித உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்த அதிகரிக்க கூடும் என்ற அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் செல்வதன் மூலம், ரத்த அழுத்தம் உயரலாம் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஜர்னல் என்ற இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள டன்பே தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக துறை இந்த ஆய்வை நடத்தியது.
பிளாஸ்டிக் பாட்டில் எதிலும் அடைக்காத தண்ணீரை ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. பிளாஸ்டிக் நுகர்வு குறையும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவு குறைவதையும் கண்டுபிடித்தனர். இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதை தீர்மானித்துள்ளனர். எனவே, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரை முடிவாக உள்ளது.
Read More : விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?