Alert: இந்த APP மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க...! புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் நடக்கும் மோசடி...! காவல்துறை எச்சரிக்கை
சைபர் குற்றவாளிகள் இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி செய்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இணையதளத்தில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்றால், உங்களுக்கு தெரியாத எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு apk file அல்லது லிங்க் செய்தி வந்தால், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம்.
அந்த apk file திறந்தால், உங்கள் போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் அறிந்து பண மோசடி செய்வார்கள். எனவே, வாட்ஸ்அப்பில் இதுபோன்ற அறிமுகமில்லாத எண்களில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாராதவிதமாக இதுபோன்ற பண மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.