For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இந்தியா' இல்லை 'பாரத்', அசோக சக்கரத்திற்கு பதில் இந்து கடவுளின் உருவம்.! தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு .!

11:51 AM Dec 01, 2023 IST | 1newsnationuser4
 இந்தியா  இல்லை  பாரத்   அசோக சக்கரத்திற்கு பதில் இந்து கடவுளின் உருவம்   தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
Advertisement

சமீபகாலமாகவே மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதில் இந்தியா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கடும் சர்ச்சை நிலவி வருகிறது.

Advertisement

இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய சின்னம் வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் இன்று முதல் இந்து கடவுளான தன்வந்திரியின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. மேலும் மூவர்ண கொடியோடு இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு கேரளா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அறிவியலுடன் தொடர்புடைய மருத்துவத்தில் மத நம்பிக்கைகளையும் மத கடவுள்களையும் கொண்டு வருவது ஆபத்தானது. இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தில் அங்கம் வகிக்கும் கேரள மருத்துவ சங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் ஆன வெங்கடேசன் தேசிய மருத்துவ ஆணையத்தில் அசோக சக்கரத்தை நீக்கிவிட்டு இந்து மத கடவுளான தன்வந்திரியின் உருவத்தை பதிந்திருப்பது மிகவும் அபத்தமானது என தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு செய்வதன் மூலம் மருத்துவமனைகள் தன்வந்திரி நிலையமாக மாறிவிடாது எனவும் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த எதிர்ப்புகளுக்கு பதில் அளித்திருக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் கங்காதர் புதிய சின்னத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தன்வந்திரியின் உருவம் இருந்ததாகவும் தற்போது அதற்கு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.

Tags :
Advertisement