முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அலட்சியம் வேண்டாம்..!! உடனே மாத்துங்க..!! இல்லைனா உங்க வங்கிக் கணக்கு வரை ஆபத்து..!!

08:37 AM Nov 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இணையத்தில் பல்வேறுத் தேவைகளுக்காக ஏராளமான கணக்குகளையும் அவற்றைத் திறப்பதற்கான பாஸ்வேர்டுகளையும் கையாண்டு வருகிறோம். ஆனால், அந்த பாஸ்வேர்டை பாதுகாப்பாக கட்டமைக்கிறோமா என்பது பெரும் கேள்விக்குறியே. பாதுகாப்பு குறித்த அலட்சியம் உள்ளிட்ட காரணங்களினால், ஊகிக்க மிகவும் எளிதான பாஸ்வேர்டுகளையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

Advertisement

இவை இணையத்தில் அலையும் ஹேக்கர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவழைக்கும்..! தனிப்பட்ட தகவல்களை சேமித்திருக்கும் கணக்குகள், தகவல்தொடர்புக்கானவை, வங்கி பரிவர்த்தனை கணக்குகள் உள்ளிட்ட பல ரக கணக்குகளை கையாள்வதில் இந்தியர்கள் வெகு அலட்சியம் காட்டுவதாக நோர்ட்பாஸ் எச்சரித்துள்ளது. அப்படி பெரும்பாலானோர் கையாளும் பாஸ்வேர்ட் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது.

அவற்றில், ’123456, admin, password, admin@123, pass@123, india@123, abcd@123, password@123’ உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை எந்தவித சிரமமும் இன்றி ஹேக்கர்கள் முதல் நமக்கு வேண்டாதவர்கள் வரை எவரும் மோப்பமிட முடியும். பாஸ்வேர்ட் கட்டமைப்பதில் அலட்சியம் காட்டிவிட்டு, பின்னர் தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி இருப்பு வரை இழந்து வருந்துவதில் பயனில்லை. எனவே, பாஸ்வேர்ட் என்பதை அவற்றுக்கான உரிய வழிகாட்டுதல்களுடன் கட்டமைப்பதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது ஐயம் எழும்போதெல்லாம் உடனடியாக அவற்றை புதிதாக உருவாக்கி பயன்படுத்துவதே நல்லது.

Tags :
ஆபத்துஇணையதளம்பாஸ்வேர்ட்வங்கிக் கணக்குஹேக்கர்கள்
Advertisement
Next Article