தீராத மன உளைச்சலா.! இந்த ஒரு பொருளை மட்டும் கோயிலுக்கு தானமாக கொடுங்கள்.?!
பொதுவாக எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு சமாளித்து விடலாம். ஆனால் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளான மன குழப்பம், மன பதட்டம், மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளை சமாளிப்பது மிகவும் கடினம். இதனால் தான் மனதை எப்போதும் குழப்பம் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டும்.
மன குழப்பத்தினால் நாம் எடுக்கும் முடிவு வாழ்வில் மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். இவ்வாறு மன குழப்பத்தில் இருக்கும் போது ஒரு சிலர் கோயிலுக்கு சென்று கடவுளை வேண்டுவார்கள். ஆனால் திரும்பி வீட்டுக்கு வந்ததும் அதே மன குழப்பம் நம்மை சூழ்ந்து கொள்ளும். இதற்கு தீர்வாக ஒரு சில பொருட்களை தானமாக கோயிலுக்கு அளித்தால் மன குழப்பம் நீங்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நெய் தானம் - வீட்டின் அருகில் இருக்கும் கோயிலுக்கு விளக்கேற்ற முடிந்த அளவு நெய் வாங்கி தானமாக தந்தால் மன அழுத்தம் நீங்கும்.
பசுசான விபூதி - மன பதட்டம், மன குழப்பம் நீங்க பசுசான விபூதி வாங்கி கொடுக்க்கலாம்.
விளக்கு தானம் - பராமரிப்பு இல்லாத கோயில்களில் அடிக்கடி விளக்கு ஏற்றி பராமரித்து வருவது மன அமைதியை ஏற்படுத்தும்.
மேற்கூறிய தானங்களை செய்வதன் மூலம் மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம். மேலும் இல்லாதவர்களுக்கு உடைதானம், உணவு தானம், செருப்பு தானம் போன்ற தானங்களையும் செய்வதன் மூலம் மன கவலை நம்மை விட்டு நீங்கும்.