For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் நாட்டு கோழி குஞ்சுகள்...! எங்கு சென்று விண்ணப்பிப்பது...?

Domestic chicken chicks provided by Tamil Nadu government to women...! Where to go and apply
10:36 AM Oct 11, 2024 IST | Vignesh
பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் நாட்டு கோழி குஞ்சுகள்     எங்கு சென்று விண்ணப்பிப்பது
Advertisement

கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதிகள் என்பதை பார்க்கலாம்.

Advertisement

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் தேர்ந்தெடுத்து அரசு செயல்படுத்தி வருகிறது.

பயனாளிகளுக்கான தகுதிகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும் விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

பயனாளி சொந்த செலவில் ரூ.3200/ செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது வங்கி கணக்கில் செலுத்தப்படும். சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 % மானியம். தமிழ்நாடு மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு / செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்கக் கூடாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ் நகல் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்) குடும்ப அட்டை நகல், புகைப்படம், கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற / வறுமை கோட்டிற்கு கீழ் என்பதற்கான சான்று, வங்கி கணக்கு புத்த நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
Advertisement