விமானத்தில் செல்லும்போது இந்த பிரச்சனை இருக்கா..? என்ன காரணம்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
நம்மில் பலர் விமானங்களில் பயணம் செய்ய விரும்புகிறோம். சில பேர் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், விமானத்தில் பயணிக்கும்போது பலருக்கு மூக்கில் ரத்தம் வரும். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? சிலருக்கு விமானத்தில் பயணிக்கும் போது மூக்கில் இரத்தம் கசிவதாக பல சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஏனென்றால், இது வைரஸ் தொற்று மற்றும் அதிக உயரத்தின் கலவையாக இருக்கலாம் என்றும் இது அரிதானது ஆனால் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. சில பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் போது இந்த விசித்திரமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். சிலருக்கு அதிக உயரம் பிடிக்காது. அப்படி அதிக உயரத்தில் பயணம் செய்வது மனித உடலில் அழுத்தத்தை அதிகரிக்கும். அதன் காரணமாக மூக்கில் ரத்தம் வரலாம்.
இந்த பிரச்சனையின் பின்னணியில் உள்ள காரணங்களை புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பயணிகள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் உயரமான இடங்களுக்குச் செல்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில், உயரத்தின் அழுத்தம் குறைவாக இருக்கும் வகையில் தான் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இப்போது இந்த சிக்கல்களை முன்பை விட மிகக் குறைவாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை குறையும் என்று நம்பப்படுகிறது.
Read More : டயட்டில் இருப்பவர்களுக்கு சிக்கன் பெஸ்ட்டா..? முட்டை பெஸ்ட்டா..? எதில் புரதச்சத்து அதிகம்..?