நடைபயிற்சி மூளையை பாதிக்கிறதா? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்கவேண்டும்?. ஆய்வில் வெளியான தகவல்!
Walking: நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செல்ல வேண்டும். உண்மையில், 5 முதல் 10 நிமிடங்கள் நடப்பது உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
உடல் எடை குறைவதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நடைப்பயிற்சி முக்கியமானது. தினமும் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இதயத்தையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் நடப்பது பல நாள்பட்ட நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இதய ஆரோக்கியம் முதல் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவதில் நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும். தினமும் நடப்பது தூக்கத்தை மேம்படுத்தும். உங்கள் மன ஆரோக்கியம் மேம்படும். எனவே, உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் நடைபயிற்சியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியின் படி, தினமும் சிறிது நேரம் நடப்பது மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. இது நமது மன நிலையை மேம்படுத்துகிறது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தினமும் நடைபயிற்சி செய்வது உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கிறது. அதாவது, உங்கள் மனதை சுறுசுறுப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செய்ய விரும்பினால், கண்டிப்பாக நடக்கவும். இதற்காக, நீங்கள் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஆனால் 10-15 நிமிட விறுவிறுப்பான நடை பலனைத் தரும்.
தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். நீங்கள் வேகமாக நடந்தால், உங்கள் எடையும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வேகமாக நடக்கும்போது கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும், வாயு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
சாப்பிட்ட பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது தசைகள் குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இது சர்க்கரை அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.