பைப்பை திறந்தாலே தண்ணீர் கொதிக்கிறதா..? எப்போதும் குளிர்ச்சியாக இருக்க இதை டிரை பண்ணுங்க..!!
கோடை காலங்களில் வீட்டில் உள்ள எந்த குழாயை திறந்தாலும் 100 டிகிரி செல்சியஸில் தான் தண்ணீர் வரும். அவசரத்திற்கு கூட பாத்ரூமை பயன்படுத்த முடியாது. இப்படி கோடைக்கால பிரச்சனைகளில் இதுவும் தலையாய பிரச்சனை. இதற்கு காரணம் மொட்டை மாடியில் உச்சி வெயிலில் இருக்கும் தண்ணீர் தொட்டி சூடாவதுதான். இதற்கு வேறு வழியே இல்லையா..? என புலம்பும் உங்களுக்காக தான் இந்த பதிவு.
சூரிய ஒளி தொட்டியில் உள்ள தண்ணீரை சூடாக்குவதை தவிர்க்க சூரிய ஒளி படாதவாறு தொட்டியை மாற்றி அமைக்கலாம். தொட்டியை பொருத்தும்போதே இதையெல்லாம் சிந்தித்து வையுங்கள். தொட்டியை சுற்றிலும் சுவர் எழுப்பி மூடவும் செய்யலாம். தொட்டியை மூடிவதற்கென்றே தார் பாலின்கள் இருக்கின்றன. தொட்டியை முதலில் கோணிப் பைகளை ஒன்று சேர்த்தவாறு தைத்து மூடுங்கள். பின் அதன் மேல் தார் பாலின் போட்டு மூடுங்கள். இதனால் சூரிய ஒளி நேரடியாக படுவதை தடுக்கலாம். தண்ணீர் ஓரளவுக்கேனும் குளுர்ச்சியாக கிடைக்கலாம்.
தொட்டியை சுற்றிலும் சுண்ணாம்பு அல்லது களிமண் பயன்படுத்தி சுற்றிலும் சுவர் எழுப்பினால் தொட்டி சூடாவதை தடுக்கலாம். தொட்டி வைப்பதற்கு முன் அதன் அடியில் மண் நிரப்பி அதன் மேல் தொட்டியை வைத்தால் ஓரளவுக்கேனும் குளிர்ந்த நீர் கிடைக்கும். கருப்பு நிற தொட்டிகள் வாங்குவதை விட வெள்ளை நிற தொட்டிகள் வாங்கிப் பொருத்துங்கள். வெள்ளை நிறம் சூரிய ஒளியை உள்ளிழுக்காது. அது வெளியேற்றிவிடும் என்பதால் நீர் குளிர்ச்சியாக இருக்கும்.
தொட்டிக்கு வெள்ளை வண்ணம் தீட்ட வேண்டும். வெள்ளை வண்ணப்பூச்சு பூசப்பட்டால், நேரடி சூரிய ஒளி தொட்டியில் படாது. கூடுதல் வெள்ளை நிறம் காரணமாக, வெப்பம் மிகவும் குறைவாக இருக்கும். தண்ணீர் தொட்டிகளுக்கு அடிப்பதற்கென கடைகளில் பெயிண்டுகள் விற்பனைக்கு உள்ளன. அதை வாங்கி அடிக்கலாம்.
Read More : 2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்..!! உங்களுக்கும் இப்படி வருதா..? என்ன காரணம்..?