பட்டாசு சத்தம் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
ஒரு பெண் கருவுற்ற நாள் முதலே வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சியும் துவங்கும். குழந்தையின் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகி வளரும். இதன்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே வயிற்றில் இருக்கும் போதே குழந்தைக்கு காதும் கேட்க செய்யும். கர்ப்பகாலத்தில் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவை பலருக்கும் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நீங்கள் பேசும் அனைத்துமே வயிற்றிலுள்ள குழந்தைக்கு கேட்கும்.
கர்ப்பத்தின் முதல் வாரங்களில் குழந்தையின் காதுகள் வளரத் துவங்கும். நான்கு மாதங்களில் குழந்தைக்கு சில ஒலிகள் கேட்கும் திறன் கொண்டிருக்கும் அளவு காதுகளில் கட்டமைப்பு உருவாகும். ஐந்தாவது மாத முடிவில் தாயின் சுவாசம், இதயத்துடிப்பு, நுரையீரலில் காற்று நுழைந்து வெளியேறுதல் மற்றும் செரிமானம் போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்கத் துவங்கும். குழந்தையின் செவித்திறன் மேம்படும் போது இன்னும் அதிகரிக்கக்கூடும்.
தீபாவளி பட்டாசு சத்தம் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தா? தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது போன்ற எப்போதாவது உரத்த சத்தங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். பட்டாசு வெடிச்சத்தம் மட்டும் அல்லாமல் அவை வெளிப்படுத்தும் புகையும் கூட ஆபத்தானது தான். வெடிச்சத்தம் அதிகம் இருக்கும் போது கர்ப்பிணிகள் தங்கள் காதுகளை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் வயிற்றில் இருக்கும் குழந்தையை விட சத்தத்தால் அதிகம் பாதிக்கப்படலாம். இந்த சத்தம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி சோர்வை உண்டாக்கலாம். குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் திறனை சேதப்படுத்தலாம்.
பட்டாசு வெடிச்சத்தம் ஆனது காதுகளில் அதிகமான ஒலியை ஏற்படுத்தும். இது 24 மணி நேர வரை நீடிக்கும் ஒலியின் தீவிரம் மற்றும் அருகாமை பொறுத்து இவை நிரந்தரமாக இருக்கலாம். இந்நிலை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வெடிச்சத்தம் அதிர்வுகள் தொடர்ந்து உணர்ந்தால் அது உடலில் குழந்தைக்கும் பயணிக்கலாம். ஸ்பீக்கர் அல்லது அதிர்வுக்கான சூழலை உடல் நெருக்கமாக அனுபவிக்க எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
வெடிச்சத்தம் போன்று வீட்டில் கூட 85 டெசிபல் மேல் அதிக சத்தம் வைக்க வேண்டாம். இது காதுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். தீபாவளியின் போது ஏற்படும் சத்தம் மற்றும் அதற்கு முந்தைய வாரத்தில் அடிக்கடி ஏற்படும் சத்தம் உங்களுக்கு கர்ப்ப கால மன அழுத்தம் பதற்றத்தையும் ஏற்படுத்துவதோடு, போதுமான ஓய்வு பெறுவதையும் தடுக்கிறது.
வெடி சத்தத்தை தவிர்க்க எளிய வழிமுறைகள் :
- அதிகபட்ச சத்தம் வீட்டிற்குள் வராமல் பாதுகாப்புக்காக ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும்.
- பருத்தி கம்பளி மூலம் உங்கள் காதுகளைப் பாதுகாக்கவும். பட்டாசு வெடிக்கும் இடங்களுக்கு அருகே செல்வதை தவிக்க வேண்டும்
- பட்டாசுகளுக்குப் பதிலாக இரவில் வெடிக்கப்படும் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சாட்டை, ராக்கெட், சங்கு சக்கரம் போன்ற அதிக சத்தம் மத்தாப்புகளை பயன்படுத்தி தீபாவளியைக் கொண்டாடுங்கள். இதனால் உங்களுக்கும் உங்களுள் வளரும் குழந்தைகக்கும் வெளிப்படும் மாசுபாட்டு பிரச்சனையிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
- வானவேடிக்கை பார்ப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். அவைகள் தான் உங்களுக்குள் இருக்கும் குழந்தையையும் உங்களின் குழந்தை தனத்தையும் சந்தோசப்படுத்தும்.
- அதிக சத்தத்தின் போது ஹெட்ஃ போன்கள் பயன்படுத்தலாம்.
Read more ; கள்ளக்காதலனுடன் ஓடிய 2 குழந்தைகளின் தாய்…! அடிக்கடி மயானத்துக்கு வந்து அரங்கேற்றிய கொடூரச்செயல்…!