For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாகிறதா..? அசால்ட்டா இருக்காதீங்க..!! வெடிக்கும் அபாயம்..!!

11:36 AM Apr 17, 2024 IST | Chella
செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாகிறதா    அசால்ட்டா இருக்காதீங்க     வெடிக்கும் அபாயம்
Advertisement

செல்போனை சார்ஜ் செய்யும்போது சூடாவதற்கான காரணம் மற்றும் அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பொதுவாக செல்போன்கள் சார்ஜ் செய்யும்போது சூடாவது இயல்பானது. ஆனால், போன் அதிகமாக சூடாக இருந்தால் அதில் பாரிய பிரச்சனை இருக்கும். அதேபோல் சில செல்போன்கள் சார்ஜ் போட்டவுடனே சூடாகும். இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம். நீங்கள் செல்போனில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதோ அல்லது கேம் விளையாடும்போதோ அல்லது ஏதேனும் செயலியை பயன்படுத்தும்போதோ மொபைல் சூடானால், உங்கள் மொபைல் Multi Tasking செய்ய ஏற்ற மொபைல் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே, ஒரே நேரத்தில் மொபைலை சூடாக்கும் விஷயங்களை செய்ய வேண்டாம்.
உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்ய 3ஆம் தரப்பு சார்ஜர் அல்லது கேபிளைப் பயன்படுத்தினால், உங்கள் செல்போனை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, ஒரிஜினல் சார்ஜரை (Charger) மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போனில் Storage அதிகமாக இருந்தால் கூட வெப்பமடைய வாய்ப்புள்ளது.

அதனால் எப்போதும் அளவுக்கு அதிகமான Storageஐ மொபைலில் வைத்திருக்க வேண்டாம். அதேபோல் மொபைல் Charge ஆன பின்பும் தொடர்ச்சியாக சார்ஜரிலேயே வைத்துக் கொண்டிருப்பதும், செல்போன் சூடாவதற்கு ஒரு காரணம். இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள் ஆகும். உங்களின் மொபைல் போன் Hack செய்யப்பட்டிருந்தால் கூட அளவுக்கு அதிகமாக சூடாக வாய்ப்புள்ளது. இணையம் பயன்படுத்தும் போதெல்லாம் உங்கள் மொபைல் சூடானால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறுதியாக, உங்களது மொபைலை தொழில்நுட்ப உதவியைக் கொடுப்பவரை நாடி, சூடாகும் பிரச்சனை இருந்தால் சரி செய்துகொள்வது அவசியம். இல்லையெனில் செல்போன் வெடிக்கக் கூட வாய்ப்பு உள்ளது.

Read More : Tips | பூச்சிகளிடம் இருந்து கோதுமை உள்ளிட்ட மாவுகளை பாதுகாக்க வேண்டுமா..? சூப்பர் ஐடியா..!!

Advertisement