முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரவில் பிரா அணிந்து தூங்குவதால் மார்பக புற்றுநோய் வருமா..? பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!!

One of the most important things for a human being in our daily life is physical health.
11:40 AM Oct 15, 2024 IST | Chella
Advertisement

நம் அன்றாட வாழ்வில் ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று உடல் ஆரோக்கியம். அது நன்றாக இருந்தால் தான், நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியும். அந்த வகையில், பெண்களின் ஆரோக்கியம் என்பது ஒரு குடும்பத்திற்கும் அவளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல வாழ்விற்கும் மார்பக ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சரியான அளவிலான பிரா அணிவது என்பது மிகவும் அவசியம். இந்த பிரா நல்ல தோற்றத்தையும், மார்பகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்நிலையில், பல பெண்களுக்கு இரவில் பிரா அணிந்து தூங்கலாமா? தூங்கக்கூடாதா? மேலும் அவ்வாறு தூங்கினால் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு நாம் ஆளாவோமா? என்ற குழப்பங்கள் இருக்கும். அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சில பெண்கள் பிரா அணிந்து தூங்க விருப்பப்பட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு ப்ரா அணிந்து தூங்கும் போது சற்று ஏதோ ஒன்று அசௌகர்யமாக இருக்கும். 99% பெண்களிடையே புற்று நோய்கள் குறிப்பாக மார்பக புற்றுநோய்கள் உலகம் முழுவதும் உருவாகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஆனால் பிராக்களால் மார்பகப் புற்றுநோய் உண்டாவது குறித்து எந்தவொரு ஆதாரங்களும் இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

இரவில் தூங்கும்போது, தளர்வான மற்றும் நமக்கு வசதியாக உள்ள பிரா அணிந்து தூங்கினால் அது எந்த ஒரு தீங்கையும் நமக்கு விளைவிக்காது. ஆனால், நம்முடைய பிரா சைஸ் என்னவென்று தெரியாமல் சற்று இறுக்கமாக உள்ள பிராக்களை அணிவதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம் தீங்கு விளைவிக்கும். இதனால் இறுக்கமான சூழலில் தோளில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இறுக்கமான பிரா அணிந்து தூங்குவதால் மார்பகப் புற்றுநோயின் வாய்ப்பு அதிகம் என்று பரவலாக நம்பப்படுகிறது. இருப்பினும் எந்த ஒரு கருத்துக்களும் அதற்கு ஆதரவாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More : கனமழையால் விடுமுறை..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்..!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!!

Tags :
பிராபெண்கள்மார்பக புற்றுநோய்
Advertisement
Next Article