நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் முழங்கால்கள் பாதிக்கப்படுமா? மருத்துவர் உடைத்த உண்மை..
பொதுவாக நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் முழங்காலில் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பழக்கம் காரணமாக, கீல்வாதம் ஏற்படும் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் முழந்தாலுக்கு தீங்கு ஏற்படுமா? அல்லது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா? மருத்துவர்கள் இதுபற்றி என்ன சொல்கின்றனர் என்று தற்போது பார்க்கலாம்.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது மூட்டுகளை சேதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முழங்கால்களில் நீர் நேரடியாகக் குவியத் தொடங்குகிறது, இது கீல்வாதத்தின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. இது இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இந்த பழக்கம் சிறுநீரகத்தை சேதப்படுத்துகிறது, ஏனெனில் உடலில் இருந்து தண்ணீர் வடிகட்டப்படாமல் வெளியேறுகிறது என்றும் கூறப்படுகிறது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் முழங்கால்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குருத்தெலும்பு, தசைநார் அல்லது எலும்பு போன்ற மூட்டுகளின் பாகங்கள் தேய்மானம் அடையும் போது அல்லது சில காரணங்களால் காயமடையும் போது மூட்டு சேதம் ஏற்படுகிறது.
மூட்டு பிரச்சனைகளுக்கு மிகவும் பொதுவான காரணம் கீல்வாதம் ஆகும், இது எலும்புகளை ஆதரிக்கும் பாதுகாப்பு குருத்தெலும்புகளின் தேய்மானத்தால் ஏற்படுகிறது. இது எலும்புகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் தடுக்கும் குஷன் போல செயல்படுகிறது.
உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது பொதுவாக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இது நல்ல செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இருப்பினும், நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உட்கார்ந்திருக்கும் போது தண்ணீரை மெதுவாகவும் வசதியாகவும் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள், அது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்காக தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.