For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!

11:30 AM May 02, 2024 IST | Chella
இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்     நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்
Advertisement

மருத்துவர்கள் நமக்கு தேவையான மருத்துவ வழிகாட்டுதலை வழங்கினாலும், ஒரு சில முக்கியமான விஷயங்களை அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்கலாம். சமச்சீரான வாழ்க்கை முறையை பராமரிப்பது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்றவை இதில் அடங்கும்.

Advertisement

மருத்துவ சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்டு, முழுமையான சுகாதார மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை பராமரிப்புகள், உணவு சார்ந்த பழக்கங்கள் மற்றும் மனநலன் போன்றவை பற்றி நோயாளிகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அவ்வாறான ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உங்களுடைய உணவுமுறை சரியாக இருந்தால் உங்களுக்கு மருந்துகள் தேவை இல்லை. ஆனால், உங்களுடைய உணவு முறையே தவறாக இருக்கும் பட்சத்தில் மருந்துகள் எந்த ஒரு பலனும் அளிக்காது. தைராய்டு, நீரிழிவு நோய், PCOS, மகப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், இரைப்பை குடல் கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மருந்துகள் மட்டுமே போதாது. இந்த நோய்க்கான அடிப்படை காரணத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதாவது உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் செய்வது அவசியம். தொடர்ச்சியாக நீங்கள் மருந்துகள் சாப்பிடும்போது, அது உங்களுடைய அறிகுறிகளை ஓரளவு கட்டுப்படுத்த உதவுமே தவிர நோய்க்கான தீர்வாக அமையாது. ஆகவே, இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுடன் சேர்ந்து தீவிரமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

ஒருவரது ஊட்டச்சத்து மற்றொருவருக்கு விஷமாக மாறலாம். இந்த உலகில் உள்ள அனைவருமே தனித்துவமானவர்கள். அந்த வகையில், 3 தனித்துவமான உடல் வகைகள் உள்ளன. அவை வாதம், பித்தம் மற்றும் கபம். வாத உடல் வகையை கொண்டவர்கள் அதிக காய்கறிகளையும், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டின், அதிக கசப்பு, காரம், துவர்ப்பு உணவுகள் மற்றும் குறைந்த இனிப்பு, உப்பு பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதே நேரத்தில் பித்தம் பிரிவுகளின் கீழ் வருபவர்கள் அதிக கார்போஹைட்ரேட்டுகள், குறைவான புரோட்டீன்கள் மற்றும் காய்கறிகள், அதிக இனிப்பு, புளிப்பு, உப்பு, நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகள், குறைவான காரம் மற்றும் துவர்ப்பு உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். எனவே, உங்களுடைய உடல் வகைக்கு தகுந்த ஊட்டச்சத்துக்களை நீங்கள் எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

மருந்துகள் பக்க விளைவுகளை கொண்டிருக்கலாம். மருந்துகளை நீங்கள் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள், அவற்றுடன் சேர்த்து வேறு என்னென்ன மருந்துகளை சாப்பிடுகிறீர்கள் மற்றும் உணவு பழக்கங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு சில பக்க விளைவுகளை கொண்டிருக்கலாம். எந்தவொரு மருந்தாக இருந்தாலும், நீண்டகால பயன்பாடு கல்லீரலுக்கு ஆபத்தானது. உதாரணமாக பாரசிட்டமால் சோர்வு, மூச்சு திணறல், விரல்கள் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் மாறுவது, ரத்த சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம், இதய நோய், பக்கவாதம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மருந்துகள் சாப்பிடும்போது, மதுபானங்கள் அருந்துவது மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்கவும். நான் அதிக அளவில் மதுபானங்கள் அருந்தவில்லையே என்று ஒருவரால் கூறி விட முடியாது. மதுபானங்கள் நமது உடலுக்கு முற்றிலும் தீங்கு விளைவிக்க கூடியது. மேலும், மதுபானங்களுடன் மருந்துகளை கலந்து சாப்பிடுவது மிக மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கும். இது ரத்தக்கசிவு, இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மூச்சு விடுவதில் சிக்கல், வாந்தி, தலைவலி, மயக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் பிற அறிகுறிகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் எந்த ஒரு மருந்து எடுத்துக் கொள்ளும்போதும் கட்டாயமாக மதுபானங்களை தவிர்க்க வேண்டும். விஷத்தை சிறிய அளவுகளில் சாப்பிட்டு, மருத்துவர் உங்களை குணப்படுத்தி விடுவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. இங்கு விஷம் என்பது மதுபானத்தை குறிக்கிறது.

பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்களுடைய நோய்களுக்கான தீனியே தவிர உங்கள் ஆரோக்கியத்திற்கு அல்ல. பலர் தற்போது பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி உள்ளனர். இது போன்ற உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதற்காக அவற்றில் பதப்படுத்திகள், நிறத்தை சேர்க்கும் ஏஜெண்டுகள் மற்றும் சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை இது போன்ற உணவுகளுக்கு உங்களை அடிமையாக்குவதோடு மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆகவே, ஃபிரஷாக சமைக்கப்பட்ட உணவுகள், பருவ கால உணவுகள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

Read More : பெண் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.35,000..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement