சமையலுக்கு கட்டாயம் இந்த எண்ணெய் பயன்படுத்துங்க.. மருத்துவர் சிவராமன் பகிர்ந்த தகவல்..
முன்பு எண்ணெயை எண்ணெய் வித்துக்களோடு சேர்ந்து கொஞ்சம் கருப்பட்டி, இளநீர் விட்டு ஆட்டி கடைசியாக அந்த எண்ணெயை பிழிந்து எடுப்பார்கள். ஆனால் இப்போதுள்ள புதிய தொழில்நுட்பங்களில் எண்ணெயை பிழிந்து எடுப்பதெல்லாம் இல்லை. மாறாக ஹெக்சேன் என்னும் ஒரு ரசாயனத்தை போட்டால் எண்ணெய் வித்துக்கள் தானாக எண்ணெயை கக்கிவிட்டும். அதனை குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தினால் ஹக்சேன் போய்விடும்.
இந்த முறையில் எண்ணெய் அளவும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் எண்ணெயில் சிறிதளவு ஹெக்சேன் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உடலுக்கு குறிப்பாக ஈரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நம்முடைய பாரம்பரிய முறையில் தயாரான செக்கு எண்ணெய் தான் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை நெடுங்காலமாக நம் உணவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
எள்ளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை அளிக்கிறது என்பதால் நல்லெண்ணெய் என்ற பெயர் வந்தது. இந்த எண்ணெய் குறிப்பாக பெண்களின் கருப்பைக்கு உகந்தது. இதனால் தான் வயதுக்கு வந்ததும் சிறுமியருக்கு உளுந்தைகளியுடன் நல்ல எண்ணெய் ஊற்றி கொடுக்கிறோம். அதே போல் தேங்காய் எண்ணெயும் சமையலுக்கு நல்லது.
தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலத்தில் இருந்து வரும் மோனோலாரின் எனும் பொருள் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இந்த மோனோலாரின் தேங்காயை தவிர வேறு எதிலும் கிடைப்பதில்லை.
Read more: உங்க குழந்தைக்கு பசியே இல்லையா? அப்போ வாரம் ஒரு முறை இந்த கீரையை குடுங்க..