காய்கறிகளை, இப்படி சமைத்தால் தான் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்...
பொதுவாக உணவை நாம் எப்போது எப்படி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தின் படி சாப்பிடும் போது தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு வருகிறோம். இதனால் தான் இன்றைய காலகட்டத்தில் சிறு வயதில் இருந்தே பல் வேறு வகையான வியாதிகளை சந்திக்கின்றனர். அந்த வகையில், எப்படி சாப்பிட்டால் நாம் ஆரோக்யமாக இருக்க முடியும் என்பதை டாக்டர் சிவராமன் விளைக்கியுள்ளார். அது குறித்து தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
எப்போதும், நமது காலை உணவை 6:45 முதல் 7:30க்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதிய உணவு மதியம் 1 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவு என்பது 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், மைதா, செயற்கை நிறமூட்டிகள் ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்த கூடாது. காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு தான் சமைக்க வேண்டும். நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை கட்டாயம் கூட்டு செய்து தான் சாப்பிட வேண்டும்.
மேலும், அனைத்து காய்கறிகளையும் புளியில் ஊறவைத்த பிறகு தான் வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். நம்மூர் தயிர்பச்சடியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதில் உள்ள வெங்காயம், உப்பு என அனைத்தும் உடலுக்கு சீர்ந்த பலனை கொடுக்கும்.