For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கா..? அப்படினா இனி இதை ட்ரை பண்ணி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

If your child is struggling to get over the thumb soup habit, don't worry. Here are some simple tips for you to break the habit..!
09:48 AM Jun 25, 2024 IST | Chella
உங்கள் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கா    அப்படினா இனி இதை ட்ரை பண்ணி பாருங்க     சூப்பர் ரிசல்ட்
Advertisement

பொதுவாக பல குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும். ஆனால், நாளடைவில் பல குழந்தைகள் தாங்களாகவே அதனை மறந்து விடுவார்கள். ஆனால், ஒரு சில குழந்தைகள் அந்த பழக்கத்தை விட முடியாமல் தவிப்பார்கள். உங்கள் குழந்தையும் கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தால், கவலை வேண்டாம். அந்தப் பழக்கத்தை போக்கக் கூடிய சில எளிய டிப்ஸ் இதோ, உங்களுக்காக..!

Advertisement

* உங்கள் குழந்தைக்கு கட்டை விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அதனைப் போக்க மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கட்டை விரலில் எலுமிச்சை சாறு போன்ற புளிப்பான ஒன்றை அவர்களின் கட்டை விரலில் தடவி விடுங்கள். குழந்தைக்கு கட்டை விரலை சப்பக் கூடாது என்று நினைவூட்டினால், அவர்கள் கைகளை எடுத்து விடுவார்கள். அதற்கு பதில் இவ்வாறு எலுமிச்சை சாற்றைத் தடவினால், அது கட்டை விரலை சப்பக் கூடாது என்று அவர்களுக்கு நினைவூட்டும்.

* கட்டை விரல் சூப்பும் பழக்கம் ஒரு தீய பழக்கம் என்று உங்கள் குழந்தைக்கு தெரியும். அதனால், குழந்தையிடம் இது குறித்து நீங்கள் பேசலாம். நீ ஏன் கை சூப்புகிறாய் என்று மிரட்டாமல் ஆச்சரியமாக அவர்களிடம் கேளுங்கள். உங்கள் குழந்தை வாயில் இருந்தே நீங்கள் அவர்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டி, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க ஊக்குவிக்கலாம்.

* உங்கள் குழந்தைக்கு கை சூப்பும் பழக்கம் இருந்தால், நீங்கள் தான் அதனை மறக்கடிப்பதற்கு மெனெக்கெட வேண்டும். இது ஒரு சவாலான செயல் தான் என்றாலும், நீங்கள் அவர்களுக்குப் பிடித்த வேறு செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த பழக்கத்தில் இருந்து மீட்கலாம். கைகளை பயன்படுத்தும் விதத்தில் வரைதல், கிராஃப்ட்ஸ், விளையாட்டுக்கள் என அவர்களை பிஸியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் அறிவை வளர்ப்பதோடு, இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடவும் உதவியாக இருக்கும்.

* சில குழந்தைகள் பசியாக இருக்கும் போது விரல் சூப்புவார்கள். அதனால், நீங்கள் அவர்களின் தினசரி உணவில் கவனம் செலுத்த வேண்டும். பசி எடுக்கும் போது, அவர்கள் விரலை சூப்புவதற்கு முன்னரே சத்தான ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

* உங்கள் குழந்தை எந்த நேரத்தில் விரல் சூப்புகிறார்கள் என்பதை கவனியுங்கள். சில குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் விரல் சூப்புவார்கள். அதனால், நீங்கள் வேறு விதங்களில் அவர்களை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்யுங்கள். இரவில் பல் தேய்ப்பதற்கு முன், ஒரு கப் வெது வெதுப்பான பால் அல்லது ஹெர்பல் டீ குடுக்கலாம். மறுபுறம், குழந்தை பதட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கை சூப்பினால், அவர்களின் பதட்டத்திற்கான காரணம் அறிந்து பதட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

Read More : சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement