சிவபெருமானின் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறீர்களா..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!
புராணங்களில் சிவபெருமானின் சிலை அல்லது படத்தை தினமும் தரிசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், பெரும்பாலான வீடுகளில் சிவபெருமானின் படம் சிறப்பாக வைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் அருளையும், புண்ணிய பலனை பெற முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், வீட்டில் சிவபெருமானின் படத்தை வைக்கும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
நடனமாடும் சிவபெருமான்
பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம். ஆனால், இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும். இது வீட்டிற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும். சிவபெருமானின் கோப ரூபத்தை தினமும் தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களின் இயல்பில் கோபமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் தாண்டவம் ஆடும் சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டுமாம்.
வீட்டில் சிவன் சம்பந்தப்பட்ட படத்தை வைக்க வேண்டுமானால், 12 ஜோதிர்லிங்கங்களில் ஏதேனும் ஒரு படத்தை வைக்கலாம். இது வீட்டில் நேர்மறை சக்தியை பரப்புகிறது. அதன் நல்ல பலன் வீட்டில் வசிப்பவர்களிடமும் தெரியும். சிவபெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வடிவில் இருக்கும் வீட்டில் சிவபெருமானின் சாந்த நிலையைப் பற்றிய படத்தையும் வைக்கலாம்.
அப்படிப்பட்ட சிவபெருமானின் படத்தை வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவுகிறது. சிவபெருமான் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். படத்தை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருங்கள். மாதவிடாய் நிலையில் உள்ள பெண்கள் சிவபெருமான் படத்தை தொடக்கூடாது. சிவபெருமானுக்கு போடப்பட்டுள்ள மலர் மாலைகள் காய்ந்துவிட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.
Read More : ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?