உங்கள் உயரத்தை அதிகரிக்க வேண்டுமா..? இந்த 6 உணவுகளை மட்டும் மறக்காம சாப்பிடுங்க..!!
உயரமாக இருப்பதும் உயரம் குறைவாக இருப்பதும் அவரவர் தனிப்பட்ட மரபணுவை சார்ந்தது. என்றாலும் கூட, சில ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கூட வளர்ச்சி தடை செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் இயற்கையாகவே உங்களின் உயரத்தை அதிகரிக்க எண்ணினால் கீழே காணும் இந்த உணவுகள் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
முட்டைகள் : புரதச்சத்து மிகுந்த முட்டையில் உயரத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வாகும்.
கீரைகள் : கீரை அல்லது காலே போன்ற பச்சை இலைக் காய்கறிகள் ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்கள் தான். அவை எலும்பு அடர்த்தியை அதிகரித்து உங்கள் உயரத்தை பராமரிக்க உதவும்.
பாதாம் : தினமும் பாதாம் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இருப்பினும் இதில் உயரமாக வளர தேவையான பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
தயிர் : இந்த வெயில் காலத்தில் தயிர் சாப்பிடுவதற்கு ஒரு சிறந்த உணவாகும். இதில், வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரங்கள் நிறைந்திருப்பதால், இதை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
பீன்ஸ் : ஹெல்த்லைனின் அறிக்கைப்படி, பீன்ஸில் உங்களின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
Read More : காதல் என்ற பெயரில் காம லீலைகள்..!! பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம்..!! இளைஞருக்கு தாயே உடந்தை..!! பரபரப்பு சம்பவம்..!!