முக சுருக்கம் நீங்கி முகம் இளமையாக மாற வேண்டுமா..? அப்படினா கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
நம்மில் பலருக்கும் பிடித்த உணவுப்பொருட்களில் ஒன்று பனீர். இதன் பெயரைக் கேட்டாலே பலரின் நாவில் எச்சில் சுரக்கும். பனீர் சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இதை பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பனீரை வித விதமாக சமைத்து சாப்பிடலாம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை அழகு பொருட்களாகவும் பயன்படுத்துதலாம் என்பது உங்களுக்கு தெரியுமா..?
முகத்தில் பனீரை பயன்படுத்துவதால் முகம் பளபளப்பதோடு, பல முக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. பாலாடைக்கட்டியுடன் சில வீட்டுப் பொருட்களைக் கலந்து ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தி வந்தால், முகத்தை பளபளப்பாக மாற்றலாம். அந்தவகையில், தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையாக தெரிய பனீர் பேஸ் பேக் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பனீர் - 50 கிராம்.
தேன் - 1 ஸ்பூன்.
எலுமிச்சை - 1 ஸ்பூன்.
வைட்டமின்-E காப்ஸ்யூல் - 2.
செய்முறை :
* முதலில், கோப்பை ஒன்றை எடுத்து அதில் பனீர் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
* பின்னர், அதனுடன் எலுமிச்சை சாறை கலந்துக்கொள்ளவும்.
* இப்போது, இதில் போதுமான அளவு தேன் சேர்த்து நன்கு மைபோல கலக்கவும்.
* பனீர் பேஸ்டில் வைட்டமின் E எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை மூடி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனென்றால், நாம் சேர்த்த அனைத்துப் பொருட்களும் ஒன்றாக கலக்கும்.
எப்படி பயன்படுத்துவது..?
* முதலில் உங்கள் முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
* பின்னர், ஈரம் இல்லாமல் முகத்தை நன்கு துடைக்கவும்.
* இப்போது, ஃபேஸ் பேக்கினை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
* இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்யவும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் தெரியும். முகத்தில் உள்ள புள்ளிகளை குணப்படுத்துவதுடன், சருமமும் பளபளப்பாக மாறும்.