For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓய்வு காலத்திற்கு பிறகு மாதம் ரூ.40,000 வருமானம் கிடைக்க வேண்டுமா..? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

04:52 PM Nov 07, 2023 IST | 1newsnationuser6
ஓய்வு காலத்திற்கு பிறகு மாதம் ரூ 40 000 வருமானம் கிடைக்க வேண்டுமா    நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
Advertisement

நாம் சரியான இடத்தில் தான் முதலீடு செய்திருக்கிறோமா என்பது தெரியாமல் இருக்கக்கூடிய பல முதலீட்டாளர்கள் உள்ளனர். எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும் அந்தத் திட்டத்தை முழுதாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். உங்களது இலக்குகளுக்கு அந்த திட்டம் ஏதுவாக இருக்குமா? என்பதை கண்டறிந்த பின்னரே அதில் முதலீடு செய்ய வேண்டும்.

Advertisement

பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து விட்டு ஓய்வுக்கு பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். இந்த எண்ணத்தை செயல்படுத்துவதற்கு ஒருவர் ரிட்டயர்மென்ட்டுக்கு முன்பு சரியான முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில உதாரணங்களை தற்போது பார்க்கலாம்.

ஒரு நபர் தனக்கு 51 வயதாகும் போது, ஓய்வு பெற இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 10 வருடங்கள் உள்ளன. அவர் செய்துள்ள முதலீடுகளுக்கான போர்ஃட்போலியோ சரிபார்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.

போர்ட்ஃபோலியோ செக்கப் :

* இவர் கடந்த 2 முதல் 3 வருடங்களுக்கு முன்பில் இருந்தே ஈக்குவிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளார்.* இவர் சற்று முன்பாகவே முதலீடு செய்ய துவங்கி இருப்பதால் இவரின் முதலீடு தொகை பெரிய அளவில் இல்லை.* போதுமான அளவு சேமிப்பதற்கு இவர் இன்னும் கூடுதலாக 2 முதல் 3 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெறலாம்.* இவரது இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு வருடமும் SIPயில் கிடைக்கக்கூடிய 10% லாபம் அவசியமாக கருதப்படுகிறது.* குறுகிய கால இலக்குகளை அடைவதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ரெக்கரிங் டெபாசிட்களை பயன்படுத்தி சேமிக்கலாம்.* பல சிறிய மற்றும் மிதமான அளவு ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார் என்பதால் எந்த ஒரு ஏற்ற இறக்கத்தையும் சமாளிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முக்கியமான சில பரிந்துரைகள் :

* ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் அதிகப்படியான முதலீடு செய்துள்ளார் என்றால், ஃபண்டுகளின் எண்ணிக்கையை குறைப்பது நல்லது.* ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.* உங்களது பொருளாதார இலக்கு கிட்டத்தட்ட அடையக்கூடிய தருவாயில் இருக்கும் போது, எடுக்கக்கூடிய ரிஸ்குகளை குறைத்துக் கொள்ளவும். அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

விடுமுறை மற்றும் ரிட்டயர்மென்ட் ஆகிய இரண்டுக்கும் நிதியை ஒதுக்குவது எளிது :

* ஒருவர் 49 வயதில் ஓய்வு பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார். * இவர் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்துள்ளார்.* ஃபிக்சட் டெபாசிட்டுகள் மற்றும் வருடாந்திர முதலீடுகளுக்கு பயன்படுத்துவதற்கு இவரிடம் 75 லட்சம் ரூபாய் பணமாக இருக்கிறது.* இவரிடம் இருக்கக்கூடிய தொகை வெக்கேஷன்கள் மற்றும் 35 முதல் 40 வயதில் ஓய்வு பெறுவதற்கு போதுமான அளவாக உள்ளது.* பிராவிடண்ட் ஃபண்ட் தொகையை பயன்படுத்தாமல் இன்னும் 3 ஆண்டுகளுக்கு அதனை பெருக விடவும்.* எல்லாவிதமான நிதிகளின் செயல் திறனையும் கூர்ந்து கவனித்து, வழக்கமான முறையில் அவற்றை ஆய்வு செய்யவும்.
Tags :
Advertisement