வாழ்க்கையில் இந்த மாதிரி இருக்கணும்னு நினைக்கிறீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..!!
எப்போதும் ஆற்றலோடு இருப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், அவ்வாறு இருப்பதற்கான யுக்திகள் என்ன என்பதை நாம் யோசிப்பதே இல்லை. சிறந்த கலாச்சாரம் மற்றும் புத்தாக்க யோசனைகளுக்கு பெயர் போன ஜப்பான் நாடு நம் உடலையும், மனதையும் எப்போதும் ஆற்றலோடு வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விதமான நுட்பங்களை பரிந்துரை செய்கிறது. பாரம்பரிய யோசனைகள் முதல் நவீன பழக்க வழக்கங்கள் வரை உங்கள் உடலில் அளவில்லா ஆற்றலை உண்டாக்க உதவுவதற்கு ஜப்பான் நாட்டு மக்கள் பலரும் பின்பற்றும் ஒரு சில யுக்திகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Ikigai : வாழ்க்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள Ikigai என்பது நீங்கள் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை. உங்களுக்கு மகிழ்ச்சி, மன நிறைவு மற்றும் வாழ்வதற்கான ஒரு காரணமாக அமையக்கூடிய செயல்பாடுகளை நீங்கள் கண்டறிய வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் முன்னோக்கி செல்வீர்கள்.
Kaizen : இந்த நுட்பம் வாழ்க்கையின் அனைத்து அங்கங்களிலும் தொடர்ச்சியான மேம்பாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் தொடர்ச்சியான மாற்றங்களை செய்வதன் மூலமாக ஆற்றல் மற்றும் வாழ்க்கை நலனை ஊக்குவிக்க முடியும்.
Hara Hachi Bu : இதனை மொழிபெயர்க்கும் போது “உங்கள் வயிறு 80% நிறையும் வரை மட்டுமே சாப்பிடவும்” என்ற அர்த்தம் கிடைக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய உடலின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு, நீங்கள் மென்று சாப்பிடக்கூடிய ஒவ்வொரு கடியையும் அனுபவித்து சாப்பிட வேண்டும்.
Shoshin : வாழ்க்கையில் பெரிதாக எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ஆரம்ப கட்ட மனநிலையோடு வாழ்க்கையை அணுகும் நபர்களுக்கான பயிற்சிதான் இது. முன்கூட்டியே விஷயங்களை கணிப்பதை தவிர்த்து விட்டு, வாழ்க்கையை ஒரு ஆச்சரியத்தோடு எதிர்கொள்ளும்போது, உங்களுக்கு புதுவிதமான ஊக்கமும், ஆற்றலும் கிடைக்கிறது.
Wabi-sabi : எல்லாமே பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று இன்றைய சமூகம் எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த நுட்பமானது குறைபாடுகளின் அழகை கொண்டாடுகிறது. வாழ்க்கையில் இருக்கும் சிறு சிறு தவறுகளை நாம் அனுபவித்து அவற்றை கொண்டாட வேண்டும். ஒரு கட்டத்தில் அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, உங்களுடைய ஆற்றல் நிரப்பப்படுகிறது.
Shinrin-yoku : வனங்களில் அதிக நேரம் செலவிடுவதை ஜப்பானியர்கள் விரும்புகின்றனர். ஜப்பானிய மொழியில் ஷின்ரின் என்றால் காடு என்றும் யோகு என்றால் குளியல் என்றும் பொருள். இந்த யுக்தியில் இயற்கையின் ஓசைகள் மற்றும் வாசனைகளை நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கி அனுபவிக்க வேண்டும். பசுமை நிறைந்த இடங்களில் நேரத்தை செலவிடும்போது, உங்கள் மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்பட்டு, உடல் மற்றும் மனது புத்துயிர் பெறுகிறது.
Ganbaru : முயற்சியும், விடாமுயற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே ஆழமாக வேரூன்றி நிற்கிறது. ஆனால், Ganbaru யுக்தியானது வெற்றிப் பாதையில் வரக்கூடிய தடைகளை சமாளிப்பதற்கு உங்களை ஊக்குவிக்கிறது. எந்தவொரு தடை வந்தாலும் அதனை தகர்த்து எறியும் மனநிலையோடு இருப்பதன் மூலமாக உங்களுடைய உட்புற வலிமை மற்றும் ஆற்றல் அதிகரிக்கிறது.
Gaman : சவால்களை பொறுமையோடு ஏற்று உட்புற அமைதியை வளரச் செய்து, வாழ்க்கையின் கடினமான சூழல்களை எதிர்த்து வருவதற்கு இந்த யுக்தி பயன்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அன்போடும், கண்ணியத்தோடும் அணுக வேண்டும் என்பதில் இது கவனம் செலுத்துகிறது.
Read More : உங்களுக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லையா..? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? உடனே இதை பண்ணுங்க..!!