For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கணுமா’..? வெறும் ரூ.100 இருந்தால் போதும்..!! ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்..!!

07:44 AM Apr 12, 2024 IST | Chella
 அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு இருக்கணுமா’    வெறும் ரூ 100 இருந்தால் போதும்     ஊட்டியை சுற்றிப் பார்க்கலாம்
Advertisement

கோடை காலத்தில் செல்வதற்கென தமிழ்நாட்டிலும்,கேரளா, கர்நாடகாவிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. உதாரணத்திற்கு தமிழ்நாட்டின் மலை பிரதேசங்களான சேலத்தின் ஏற்காடு, திருநெல்வேலியின் மாஞ்சோலை, நீலகிரியின் ஊட்டி, திண்டுகல்லின் கொடைக்கானல், தேனியின் தென்மலை என பிரபலமான பல இடங்கள் உள்ளன. கேரளாவில் வயநாடு, மூணாறு போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்புவார்கள். மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் கோடை கால சீசன் தற்போதே தொடங்கி உள்ளது.

Advertisement

இதனால், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சேவையை தொடங்கி வைத்தார்.

முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Gold | அடடே..!! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..? தங்கம் விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்..?

Advertisement