For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்கள் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கணுமா..? இதை படிச்சா உங்களுக்கே ஒரு ஐடியா வரும்..!!

02:41 PM Apr 16, 2024 IST | Chella
நீங்கள் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கணுமா    இதை படிச்சா உங்களுக்கே ஒரு ஐடியா வரும்
Advertisement

உங்களது வருவாய்க்கான வரியை மிச்சப்படுத்துவதற்கான, 5 முக்கிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

வீட்டுக் கடன் :

ஒரு வங்கி, NBFC அல்லது வீட்டுக் கடன் நிறுவனம் போன்ற நிதி நிறுவனத்திடம் இருந்து, வீட்டுச் சொத்தை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு வீட்டுக் கடன் பெறப்பட்டால், அந்தக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையினை குறிப்பிட்டு, குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வரி விலக்கு கோரலாம். பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்தால், மட்டுமே இந்த வரிச் சேமிப்புகள் பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்போர் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, வரிச் சலுகைகளை பெறலாம்.

EPF பங்களிப்பு அதிகரிப்பு :

சம்பளம் பெறும் தனிநபர்களின் EPF முதலீட்டு வரம்பு, ரூ.1.5 லட்சத்தை எட்டவில்லை என்றால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு கூடுதல் பங்களிப்புகளைச் செய்யலாம். இது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும். மேலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் நீங்கள் தனியாக ஆண்டுதோறும் ரூ.50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B) இன் கீழ் கூடுதலாக ரூ.50,000 வருமான வரியைச் சேமிக்கலாம்.

நன்கொடை :

ஏதேனும் நிறுவனத்திற்கும் நன்கொடை அளித்தால், ரூ.25,000 வரை வரிச் சலுகை பெறலாம். வருமான வரியின் 80ஜி பிரிவின் கீழ், நன்கொடையாக வழங்கப்படும் தொகைக்கு ரூ.25,000 வரை வரி விலக்கு கோரலாம்.

மருத்துவ காப்பீடு :

மருத்துவ பாலிசி எடுப்பதன் மூலம் ரூ.25,000 வரை வரியைச் சேமிக்கலாம். இந்த உடல்நலக் காப்பீட்டில் உங்கள் பெயர், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்கள் இருக்கலாம். மருத்துவ காப்பீடு திட்டங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், மூத்த குடிமக்கள் மருத்துவ செலவுகளை குறிப்பிட்டு ரூ.50,000 வரை சலுகை பெற முடியும்.

சரியான வரி விதிப்பு முறை :

2020-21 நிதியாண்டில் இருந்து புதிய எளிமைப்படுத்தப்பட்ட விருப்ப தனிநபர் வருமான வரி முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், சில வரிவிலக்குகள் மற்றும் சலுகைகள் இல்லாமல் பொருந்தும், குறைக்கப்பட்ட ஸ்லாப் விகிதங்களில் வரி செலுத்தலாம். இதன் விளைவாக, தனிநபர்கள் தற்போதுள்ள மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் செலுத்த வேண்டிய வரியை ஒப்பிட்டு, வரிக் கண்ணோட்டத்தில் தங்களுக்கு அதிக நன்மை பயக்கும் முறையை தேர்ந்தெடுக்கலாம்.

Read More : ஒரு மாதத்திற்கு இலவசம்..!! பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தில் மாற்றம்..!! விவரம் உள்ளே..!!

Advertisement