தீபாவளி நெருங்கிடுச்சு.. இன்னும் இரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலையா? இந்த மெத்தேடை ட்ரை பண்ணுங்க..
பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகின்றன. இருப்பினும், ரயில்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளைப் பெறுவது கடினம். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த சிக்கலை தீர்க்க இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய சில வழிகள் உள்ளன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே, விகல்ப் என்னும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காத பயணிகள், மாற்று ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் பெற முடியும்.
விகல்ப் திட்டம் எப்படி வேலை செய்கிறது? ஒரு பயணி விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்தால், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் டிக்கெட் அதே பாதையில் பயணிக்கும் வேறு ரயிலுக்கு மாற்றப்படும். அந்த ரயில் அதிகபட்சம் 12 மணி நேரம் வித்தியாசத்தில் பயணிக்கும் ரயிலாக இருக்கும். அதே பாதையில் செல்லும் ரயிலாகவும் இருக்கும்.
குறிப்பாக தீபாவளி மாதிரியான நேரங்களில், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். கடைசி நேர டிக்கெட் திண்டாட்டங்களில் இருந்து விடுதலை பெற உதவுகிறது. மாற்று ரயிலில் டிக்கெட் இருந்தால், உடனே டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனினும் பிறகு அதை கேன்சல் செய்தால், வழக்கமான கேன்சல் செய்யப்படும் கட்டணங்கள் உண்டு என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
VIKALP திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது? இந்த திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு முடிந்தவரை கன்ஃபார்ம் டிக்கெட்டுகளை வழங்க முயற்சிக்கிறது. நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, தானாகவே VIKALP ஆப்ஷன் தோன்றும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், வழித்தடத்தில் உள்ள மற்ற ரயில்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. எனவே உங்கள் வழித்தடத்தில் உள்ள மற்ற ரயிலில் சீட்கள் இருந்தால், அந்த சீட் உங்களுக்கு ஒதுக்கப்படும்.
நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என பார்ப்பதன் மூலம் எந்த ரயிலின் சீட் கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கன்ஃபார்ம் சீட்டை பெறுவீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரயில்களில் சீட்கள் கிடைப்பதைப் பொறுத்தது. இருப்பினும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கன்ஃபார்ம் சீட்டை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
Read more ; இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் 5 பேர் பலி..!! – இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்