'Virgin' பெண் தான் வேணுமா..? அப்படினா ஆண்கள் திருமணத்திற்கு முன் செக்ஸ் வெச்சிக்காதீங்க..!! பாடகி சின்மயி பதிலடி..!!
பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பாடகி சின்மயி. இந்நிலையில் தான், இந்திய ஆண்கள் திருமணம் செய்ய கன்னிப்பெண்களே இல்லை என்று புலம்பிய எக்ஸ் பயனாளரை சின்மயி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பயனாளர் ஒருவர், "பிளிங்க்இட் சிஇஓ தனது சமூக வலைத்தளத்தில் 1.2 லட்சம் காண்டம் பார்சல்கள் ஒரே இரவில் டெலிவரி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். பிளங்க்இட் தளத்தில் மட்டும் இவ்வளவு என்றால், மற்ற தளங்கள், சந்தை விற்பனை என கணக்கில் கொண்டால் 10 மில்லியனுக்கும் மேல் இருக்கலாம். இந்த தலைமுறையினர் கன்னிப் பெண்களை தேடிப்பிடித்து திருமணம் செய்வதற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, "அப்படியானால் ஆண்கள் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆண்கள் ஆடுகள், நாய்கள் மற்றும் ஊர்வனவற்றுடன் உடலுறவு கொள்கிறார்கள் என சொல்லும் வரை" என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக சின்மயியை கோமாளி என குறிப்பிட்டு, பெண்களும் அதை செய்யகூடாது என பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த சின்மயி, " பெண்கள் கன்னித்தன்மை மீது ஆர்வம் கொண்டவர்கள் இல்லை.
ஆண்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்ததாக பெண்கள் கருதுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டீர்களா..? என்று கேட்க கூட உங்கள் தைரியம் இல்லை. பாலியலில் விருப்பம் இல்லாத சகோதரர்கள், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டவுடன் நிரந்தரமாக அவர்களை மாசுபடுத்திவிட்டதாக நினைக்கின்றனர். இது ஆண்களுக்கு ஏதோ ஒரு வித நோய் இருப்பதை காட்டுகிறது" என சின்மயி குறிப்பிட்டுள்ளார்.
Read More : பாம்புடன் வித்தை காட்டிய டிடிஎஃப்..!! வீட்டிற்கு பறந்து வந்த வனத்துறை..!! வீடியோ வைரலானதால் அதிரடி சோதனை..!!