முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வேண்டுமா...? இதை செய்தால் போதும்... முழு விவரம்...

06:40 AM Jan 06, 2024 IST | 1newsnationuser2
Advertisement

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டமான உஜ்வாலா திட்டத்தின் அடுத்தகட்டமாக உஜ்வாலா யோஜனா 2.0 தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. இந்தத் திட்டத்தில் சேரும் புதிய பயனாளிகளுக்கு 1,600 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது கேஸ் அடுப்பு பெற்றுக்கொள்வது என அவர்கள் விருப்பப்படி அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

விண்ணப்பிக்க தகுதி

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்இலவச சிலிண்டர் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு பெறாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர் இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் உள்ளவர்களும் இந்த திட்டத்தின் மூலம் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறலாம்.

எப்படி விண்ணப்பிப்பது..?

இதற்கு முதலில் https://pmuy.gov.in/ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.பின்னர் அனைத்து உறுப்பினர்களின் முகவரி, ஜன்தன் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தை உள்ளிடவும். மேலும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பரிசீலித்த பிறகு, தகுதியான பயனாளிகளுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் (OMCs) இணைப்பு வழங்கப்படும்.

Tags :
central govtcylinderonline applysubcidyUjwala cylinder
Advertisement
Next Article