’பஞ்சு’ தானே அப்படின்னு நினைக்காதீங்க..!! இதுலதான் ஆபத்தே இருக்கு..!! இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!
காதில் உள்ள அழுக்குகளை நீக்கவும், காதில் புகுந்த நீரை எடுக்கவும் காட்டன் பட்ஸைதான் பலரும் பயன்படுத்துவோம். ஆனால், இது காதுகளின் கேட்கும் திறனைக் கடுமையாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
காட்டன் பட்ஸ்களை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இது மோசமான வலி மற்றும் காது கேளாமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்குமாம். எனவே, நீங்கள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, பயனுள்ளதாக இருக்கும் இந்த முறைகளை முயற்சி செய்து பாருங்கள்.
இயர் வேக்ஸ் இயல்பாகவே சுய சுத்தம் செய்யும் திறன் கொண்டது. இது உண்மையில் நன்மையளிக்க கூடியதாகவும், காதுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நுண்ணுயிரிகள் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பாக்டீரியாக்களை காதுக்குள் ஆழமாக இறங்குவதையும் இது தடுக்கிறது. காட்டன் பட்ஸ்களை தவறாமல் பயன்படுத்துவதால் உங்கள் காதுகளுக்கு சேதம் ஏற்படுவதோடு, கீழே உள்ள இயற் டிரம் சேதமடையும். இறுதியில் இது உங்கள் கேட்கும்திறனைப் பாதிக்கும்.
ஹியர் க்ளியரின் மூத்த ENT ஆலோசகர் டாக்டர் சஞ்சய் சச்தேவா கூறுகையில், இயர் கேனலின் தோல் மெல்லியதாகவும், எளிதில் சேதமடையக் கூடியதாகவும் இருக்கும். எனவே, காட்டன் பட்ஸ்களை காதுக்குள் நுழைத்தால், அதன் மென்மையான தோலில் கீறல் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் எரிச்சல், வீக்கம், வலி மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம். மேலும், நாள்பட்ட எரிச்சலானது இயர் கேனலின் தோலை மேலும் தடிமனாக்கி, இயர் வேக்ஸின் இயக்கத்தைத் தடுத்து, நிரந்தர காது கேளாண்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
காட்டன் பட்ஸ்களானது, பாக்டீரியா மற்றும் கிருமிகளால் நிறைந்திருக்கும். இது காதுக்குள் நுழைக்கும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் வலி, வீக்கம், மற்றும் காது கேளாமை ஆகியவற்றை ஏற்படுத்தும். காட்டன் பட்ஸ்களை உபயோகப்படுத்த வசதியாக இருந்தாலும், ஒரு நபரின் கேட்கும் திறனின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சாத்தியமான ஆபத்துகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், தங்கள் காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். நீங்கள் காதுகளில் ஏதேனும் அசௌகரியம், வலி அல்லது செவித்திறன் இழப்பை அனுபவித்தால், அவர்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
Read More : நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும்போது இதை எடுத்துச் செல்ல மறந்துறாதீங்க..!! என்ன தெரியுமா..?